சிங்கப்பெண்ணே: அன்பு மீது இருக்கும் காதலை உணர்ந்த ஆனந்தி… வில்லனாக மாறும் மகேஷ்!

singappenne
singappenne
Updated on

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு மீது இருக்கும் காதலை உணர்ந்துவிட்டார் ஆனந்தி. ஆனால், மகேஷ் சுயநலமாக மாறியிருக்கிறார்.

சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷ் என ஒரு முக்கோண காதல் கதை காட்டப்படுகிறது. அன்பு தான்தான் அழகன் என்று சொல்லாமல் ஆனந்தியை காதலித்து வருகிறார். அதேபோல் மகேஷும் ஆனந்தியை காதலிக்கிறார். மகேஷ்தான் இதற்கு முன் ஆனந்தியை அன்பு வீட்டில் தங்கவைத்தார். ஆனால், இப்போது அன்பு தான் அழகன் என்ற விஷயம் மகேஷுக்கு தெரிந்ததும், அவர் அப்படியே சுயநலமாக மாறியிருக்கிறார்.

ஆனந்தி இனி எந்த காரணத்தினாலும் அன்பு வீட்டில் இருக்கக்கூடாது என்று மகேஷ் நினைக்கிறார். ஆகையால், உடனே ஆனந்தியிடம் சென்று நீ இனி இங்க இருக்க வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு ஆனந்தி, “அன்பு வெளிநாடு போகும் சமயத்தில் நான் செல்ல வேண்டுமா?” என்பது போல் கேட்கிறார். மகேஷ் ஆனந்தியிடம் சென்றே ஆக வேண்டும் என்று கூறிவிடுகிறார்.

பின் ஆனந்தி மகேஷிடம், அன்புவை வெளிநாடு போக வேண்டாம் என்று சொல்லுங்கள் என்று சொல்கிறார். ஆனால், மகேஷ் பயப்படுகிறார். உடனே அது அவனுடைய தனிப்பட்ட விஷயம் அதில் நாம் தலையிடுவது சரியல்ல. என்று கூறிவிடுகிறார்.

இதையும் படியுங்கள்:
பிக்பாஸில் ஸ்கூல் டாஸ்க்… ஜாக்குலின் சொன்ன அந்த வார்த்தை.. பள்ளியைவிட்டு வெளியேறிய சத்யா!
singappenne

சரி, நான் அங்கு சென்று துணிகளை எடுத்து வருகிறேன் என்று மீண்டும் ஆனந்தி கேட்கிறார். அதற்கு மகேஷ் இனி எந்த காரணம் கொண்டும் அந்த வீட்டிற்கு செல்ல கூடாது என்று கூறிவிடுகிறார். இது பற்றி அன்புவிடம் ஆனந்தி சொல்லும் போது அன்புக்கும் அது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி அன்புவிடம் வெளிநாட்டுக்கு போக வேண்டாம் என கதறி அழுவது போல் காட்டப்பட்டு இருக்கிறது.

மேலும் அன்பு தங்கை யாழினி ஆனந்தியிடம் ஒன்று கேட்கிறார். அதாவது நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என்று. அப்போதுதான் ஆனந்தி இது குறித்து யோசிக்கிறார். இதனையடுத்து ஆனந்தியைவிட்டு பிரிவது எண்ணி அன்புவும் அழுகிறார்.  

logo
Kalki Online
kalkionline.com