சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் மித்ராவிற்கு ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது. இதன்மூலம் அன்பு ஆனந்தியின் உண்மை முகத்தை வெளியில் கொண்டு வருவாரா என்று பார்ப்போம்.
நேற்றைய எபிசோடில் ஆனந்தி இத்தனை நாட்கள் தன்னுடைய வீட்டில் தான் தங்கி இருந்தார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட அன்புவின் அம்மா கோபத்தின் உச்சகட்டத்திற்கே சென்றுவிட்டார். உடனே ஆனந்தியின் தலைமுடியை இழுத்துப் பிடித்து தரதரவென்று இழுத்து வாசலுக்கு கொண்டு வந்துவிடுகிறார். அதேசமயம் ஹாஸ்டலில் இருந்து வார்டன் மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் இறங்கி வருகிறார்கள்.
காயத்ரி இதனைப் பார்த்துவிட்டு என்னைக் காப்பாற்றதான் ஆனந்தி இப்படி செய்தார். மற்றப்படி இருவருக்குள்ளும் ஒன்றும் இல்லை என்று கூறுகிறார். ஆனந்தியை பற்றி தப்பா பேசாதீங்க என்கிறார். ஆனால், அன்பு அம்மா இதையெல்லாம் காது கொடுத்து கேட்கவே இல்லை. வார்டனும் ஆனந்தியை ஹாஸ்டலுக்கு கூட்டிக்கொண்டு வருகிறார். அங்கே மித்ரா மற்றும் அவளுடைய தோழிகள் ஆனந்தியின் அப்பா ஆனந்தியை கோபத்தில் அடிக்கப் போகிறார் என பெரிய அளவில் எதிர்பார்க்கிறார்கள்.
ஆனால் அதற்கு மாறாக ஒன்று அங்கு நடக்கிறது. மோசமான கும்பலிடமிருந்து பெண்களை ஒரு பெண் காப்பாற்றிய செய்தியை படித்தேன். அந்த பெண் நீதான் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்று அவர்.அப்பா பாராட்டுகிறார்.
இதனால், மித்ராவுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதற்கு வார்டன் மித்ரா மற்றும் அவர் தோழிகளிடம் அடுத்தவங்கள அசிங்கப்படுத்தனும்னு நினைக்காதீங்க. நீங்க அதைவிட பெரிய அளவில அசிங்கப்படுவீங்க என எச்சரித்து விட்டு வெளியே கிளம்புகிறார்.
இதனையடுத்து அன்பு தனது அம்மாவிடம் மிகவும் கோபப்படுகிறார். அதற்கு அவர் அம்மா, உன்னையும் கழுத்தப் பிடிச்சு வெளியே தள்ளிருக்கனும். அவ பொறுக்கி தனம் பண்ணிட்டு ஹாஸ்டல் விட்டு வெளிய வருவா, நான் என் வீட்டுல இடம் கொடுக்கனுமா? என்று கத்துகிறார்.
அன்புக்கு மிகவும் கோபம் வந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். இத்துடன் நேற்றைய எபிசோட் முடிந்தது.
இன்றைய ப்ரோமோவில், ஆனந்தி அப்பா ஆனந்தியிடம் எனக்கு உன் மேல ரொம்ப நம்பிக்கை இருக்குது, யார் உன்னை பற்றி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என்று சொல்கிறார். அதேசமயம் ஆனந்தி தனது தோழிகளிடம் எனக்கு அன்புவை பாக்கனும் போல இருக்கிறது என்கிறார். ஆனந்தி சொல்லி முடிப்பதற்குள், அன்பு ஹாஸ்டல் வாசலில் நின்று ஆனந்தியை அழைக்கிறார்.
மித்ராவிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் மகேஷை நம்ப வைத்தார். அன்பு ஆனந்தி காதலிப்பதற்கு ஆதாரம் கிடைத்தால் மித்ரா நிச்சயம் சும்மாவிடமாட்டார்.