சிவராஜ் குமாருக்கு புற்றுநோய்… சினிமாவுக்கு விடையளித்து அமெரிக்கா செல்கிறாரா?

Sivarajkumar
Sivarajkumar
Published on

நடிகர் சிவராஜ் குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் என்ற செய்தி  வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் ராஜ்குமார் கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமானவர். இவர் நடிகர் மற்றும் தயாரிப்பாளரும் கூட. இவருடைய மகன்கள்தான் புனித் குமார் மற்றும் சிவராஜ் குமார். இருவரும் கன்னட திரை உலகை ஆட்சி செய்தவர்கள் . இதில் புனித் ராஜ்குமார் 2021 ஆம் ஆண்டு தன்னுடைய 46 வயதில் ஹார்ட் அட்டாக் காரணமாக இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

இவரின் இறப்பிற்கு பின்னரே இவர் செய்த நன்மைகள் வெளிவந்தன. இவர் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்வி வழங்கியிருக்கிறார். அதேபோல், ஆதரவற்றோருக்கான இல்லம் முதியோருக்கான இல்லம் என அனைத்தையும் நடத்தி வருகிறார்.

இவரின் அண்ணனான சிவராஜ் குமார் சமீபக்காலமாக தமிழ் நாட்டில் பல ரசிகர்களைப் பிடித்திருக்கிறார். இவர் கேப்டன் மில்லர், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இவர் தன் தம்பி புனித் ராஜ்குமாரை விட ஒரு படி மேலே சென்று பல நன்மைகள் செய்தவர். இவரும் ஆதரவற்றோருக்கான இல்லங்கள் , ஏழை குழந்தைகள் கல்வி அறக்கட்டளை போன்றவற்றை நடத்தி வருகிறார்.

அப்பாவின் சொத்துக்களைப் பிரித்து எடுத்துக்கொண்ட இவர்கள், தங்களது முக்கால்வாசி சொத்தை இதுபோன்ற நற்பணிகளுக்காகவே  செலவிட்டு வந்தனர். நான் ஒரு நடிகன் என்னுடைய தேவையை நடித்து சம்பாதித்து பூர்த்தி செய்துக்கொள்கிறேன். அப்பாவின் சொத்துக்களெல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூறி செலவிட்டவர்தான் சிவராஜ் குமார்.

இதையும் படியுங்கள்:
சாச்சனா டெவில் செயலால் கதறி அழும் ஜெஃப்ரி, அன்சிதா! என்ன நடந்தது?
Sivarajkumar

இப்படி மக்களுக்காக வாழ்ந்தவரில் ஒருவர் ஏற்கனவே மண்ணுலகைத் துறந்தார். தற்போது சிவராஜ் குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அவர் 6 மாதக்காலத்திலிருந்து ஒரு வருடம் வரை சினிமாவை விட்டு விலகி, அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளப் போகிறார். ஆகையால் தற்போது அவர் கமிட்டான படங்களுக்கு வேறு ஹீரோக்களை சிபாரிசு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com