ஆனந்தி குறித்தான உண்மை வெளிவந்து, சுற்றி உள்ளவர்களை தலை சுற்ற வைத்திருக்கிறது. இன்று, ஆனந்தி குடும்பத்திற்கு பெரிய பிரச்சனை காத்திருக்கிறது.
ஆனந்தியை அன்பு மற்றும் மகேஷ் என இருவரும் காதலிக்கிறார்கள். இது தெரியாமல் ஒரு கட்டத்தில் அன்பு மீது ஆனந்திக்கு காதல் ஏற்படுகிறது. அது மகேஷிற்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து ஆனந்தி திடீரென்று கர்ப்பம் ஆனார். அதற்கு யார் காரணம் என்று அவருக்கே தெரியவில்லை என்பதுபோல் கதை நகர்ந்தது. இதனால், அன்புடன் எனக்கு திருமணம் நடக்கும் என்பதை மறந்து விடுங்கள் என ஆனந்தி அன்புவின் அம்மா லலிதாவிடம் சொல்லி இருந்தாள். ஆகையால், அன்புவின் அம்மா துளசியை உள்ளே கொண்டு வருகிறார். இப்படியே கதை நகர்ந்தது.
ஆனந்தி கர்ப்பமான விஷயம் தோழிகளுக்கும், வாடனுக்கும் மட்டுமே தெரியும். வேறு யாருக்குமே தெரியாது.
இப்படியான நிலையில், ஆனந்தியின் அக்கா கோகிலாவின் திருமண நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஆனந்தியும் அன்புவும் சேர்ந்து டான்ஸ் ஆடுகிறார்கள். இதைப் பார்த்த மகேஷும் துளசியும் வருத்தப்படுகிறார்கள்.
மறுபக்கம் திருமணத்தின் முதள் நாள் இரவே கோகிலாவை சுயம்புலிங்கம் கடத்திவிடுகிறார். அவரிடமிருந்து கோகிலா காப்பாற்றப்பட்டு காலை திருமணம் நடைபெறுகிறது.
பின்னர், வில்லன் மண்டபத்திற்கு வந்து ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூற அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.
யாரும் எதிர்பாராத வகையில், ஊர் முன்னிலையிலேயே அன்புக்கு ஆனந்தியின் கர்ப்பம் குறித்த உண்மை தெரியவந்துள்ளது.
இன்று வெளியான ப்ரோமோவில், சுயம்புலிங்கம் ஆனந்தியின் உண்மையை கூறி, இப்படிப்பட்ட பெண்ணை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும் என வாதிடுகிறார்.
உடனே அன்பு, "யார் என்ன சொன்னாலும் ஆனந்தி தான் என்னுடைய மனைவி, அவளை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று உறுதியாகக் கூறுகிறார். ஆனால், அன்புவின் அம்மா லலிதா இதைத் தடுத்து, "இந்த விஷயத்தை நான் தான் முடிவு செய்ய வேண்டும், நீ அல்ல" என்று சொல்கிறார்.
இந்த தேவையற்ற பிரச்சனையைத் தவிர்க்கும் பொருட்டு, ஆனந்தி அன்புவிடம் கைகூப்பி, "தயவு செய்து போய்விடுங்கள்" என்று கெஞ்சுகிறாள். ஆனந்தி ஊர் முன்னிலையில் அவமானப்படும்போது, லலிதாவால் அன்பு எதுவுமே செய்ய முடியாமல் திகைத்துப் போகிறான்.
செவரக்கோட்டையில் இருந்து ஆனந்தியை அன்பு தன் மனைவியாக அழைத்து வருகிறானா, அல்லது ஆனந்தியின் குடும்பம் இன்னும் அசிங்கப்பட வேண்டிய சூழ்நிலையை சந்திக்கப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.