
நூடுல்ஸ், டம்ப்ளிங்ஸ் மற்றும் பீட்சா போன்ற உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்க அவ்வுணவுகளின் மீது ஸ்பைஸியான சில்லி ஆயிலை தெளிப்பது இப்போது வழக்கமாகியுள்ளது. இந்த சில்லி ஆயிலை எப்படி வீட்டில் தயாரிப்பது என்பதையும், ப்ரோட்டீன் நிறைந்த மூங் டால் சப்ஜி செய்யும் முறையையும் இப்பதிவில் பார்க்கலாம்.
சிம்பிள் சில்லி ஆயில் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.சன்ஃபிளவர் அல்லது ரைஸ் ப்ரான் ஆயில் ½ கப்
2.காய்ந்த ரெட் சில்லி ஃபிளேக்ஸ் 2 டேபிள் ஸ்பூன்
3.காஷ்மீரி சில்லி பவுடர் 1 டீஸ்பூன்
4.எள் விதைகள் 1டீஸ்பூன்
5.ஸ்டார் அனிஸ் 2
6.பட்டை (Cinnamon) ஒரு சிறு துண்டு
7.லவங்கம் (Cloves) 2
8.நசுக்கிய பெப்பர் கார்ன்ஸ் 1 டீஸ்பூன்
9.பூண்டுப் பல் 2 (நறுக்கியது)
10.உப்பு தேவையான அளவு
செய்முறை:
ஒரு பானில் (Pan) எண்ணெயை ஊற்றி மீடியம் தீயில் சூடாக்கவும். சூடானதும் அதில் ஸ்டார் அனிஸ், பட்டை, லவங்கம், பெப்பர் கார்ன்ஸ் மற்றும் பூண்டுப் பல் ஆகிய வற்றை சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து எண்ணெயில் பொங்கி, அதன் மணமும் சுவையும் வெளிப்பட்டு எண்ணெயில் கலக்கும் வரை 2-3 நிமிடங்கள் வைத்திருக்கவும். பூண்டு சிவந்து, கோல்டன் கலராகி அதிலிருந்து வாசனை வெளிவரும்போது பானை அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
எண்ணெயை இரண்டு நிமிடம் ஆறவிடவும். சூடு தாங்கக்கூடிய (heat proof) ஒரு பௌலில் சில்லி ஃபிளேக்ஸ், காஷ்மீரி சில்லி பவுடர், உப்பு மற்றும் எள் விதைகளைப் போடவும். இந்த கலவை மீது, கவனமாக, காய்ச்சிய எண்ணெயை ஸ்பைஸஸுடன் ஊற்றவும். மூடி வைத்து, சில நாட்கள் வரை, சூப், சாலட், நூடுல்ஸ் போன்ற உணவுகளின் மீது கொஞ்சமாக ஊற்றி சாப்பிடலாம்.
மூங் டால் சப்ஜி ரெசிபி
தேவையான பொருட்கள்:
1.மூங் டால் 1 கப்
2.காய்ந்த ரெட் சில்லி 2
3.கடுகு ½ டீஸ்பூன்
4.தனியா பவுடர் 1 டீஸ்பூன்
5.ரெட் சில்லி பவுடர் 1 டீஸ்பூன்
6.மல்லி இலைகள் ஒரு கைப்பிடி அளவு
7.மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
8.சீரகம் 1 டீஸ்பூன்
9.உப்பு தேவையான அளவு
10.எண்ணெய் தேவையான அளவு
தண்ணீர் 1½ கப்
செய்முறை:
பாசிப் பருப்பை அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் கடுகு, ரெட் சில்லி மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும். அவை சிவந்ததும் பருப்பை தண்ணீருடன் கடாயில் சேர்க்கவும்.
பருப்பு கொதிக்கும் போது தனியா பவுடர், சில்லி பவுடர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். தண்ணீர் வற்றி, பருப்பு வெந்ததும் மல்லி இலைகளை சேர்த்து கலந்து இறக்கவும். சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையான மூங் டால் சப்ஜி ரெடி!