சிறகடிக்க ஆசை சீரியலில் க்ரிஷை முத்து அவரது வீட்டிற்கு அழைத்து வருகிறார். இதனால் ரோகினி என்ன செய்வது என்று அறியாமல் திண்டாடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், ரோகினியின் ஒவ்வொரு உண்மையும் வரிசையாக தெரிய வருகிறது. அவர் பல பொய்கள் சொல்லித்தான் மனோஜை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், விஜயா இது எதுவும் தெரியாமல், தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார்.
ஆனால், அவரின் சில உண்மைகள் தெரியவந்ததும், அதாவது ரோகினி பணக்கார வீட்டுப் பெண் இல்லை, அவரது அப்பா மலேசியாவிலேயே இல்லை போன்றவை தெரியவந்து, குடும்பத்தாரை ஷாக்கில் ஆழ்த்தியது. குறிப்பாக விஜயாவை கடும்கோபத்தில் தள்ளியது. மனோஜும் ரோகினியை விட்டு விலகத் தொடங்கினார்.
தற்போது மற்றொரு உண்மை எப்போது வெளிவரும் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.
அந்தவகையில் தற்போது முத்து க்ரிஷை வீட்டுக்கு அழைத்து வருகிறார். க்ரிஷ் ரோகினியின் மகன். ரோகினிக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் விஷயத்தை அவர் மறைத்து வருகிறார்.
தற்போது க்ரிஷின் பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று கூறி முத்து அவனை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். க்ரிஷை அழைத்து வந்ததும், ரோகினி பற்றிய உண்மையைதான் சொல்லப்போகிறாரோ என்று பயந்து மறைந்துக்கொண்டார். பின் முத்து அனைவரையும் அழைத்து ஒரு 10 நாளைக்கு இவன் இங்குதான் இருக்க போகிறான் என்று கூறியதும், விஜயா வழக்கம்போல் திட்டுகிறார்.
ஆனால், ரோகினி மனோஜை அழைத்து, ‘பாவமாக இருக்கிறான், இங்கேயே இருக்கடும், கொஞ்சம் சொல்லுங்கள்.’ என்று கூறுகிறார். உடனே மனோஜ் விஜயாவிடம் சென்று அந்த பையன் இங்கே இருக்கட்டும் என்று சொல்கிறார். பிறகு முத்து சொல்வது சரி என்று எல்லோரும் கை தூக்கிய நிலையில் ரோகிணியும் கை தூக்கி விடுகிறார்.
எப்போதும் நமக்கு எதிராக இருக்கும் ரோகினி என்ன திடீரென்று நமக்கு துணை நிற்கிறார் என்று மீனாவுக்கு சந்தேகம் வருகிறது.
பின் இரவு, ரோகினி பாசத்திற்காக ஏங்கி, க்ரிஷ் மெதுவாக மீனாவிடமிருந்து எழுந்து, ரோகினி ரூமுக்கு போகிறார். அங்கு ரோகினி க்ரிஷிடம், நான் தான் உங்க அம்மா என்று யாரிடமும் எப்பொழுதும் சொல்லக்கூடாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம் மீனா க்ரிஷை காணவில்லை என்பது தெரிந்து வெளிய வரும்போது, க்ரிஷ் சரியாக ரோகினி அறை விட்டு வெளியே வருவது மீண்டும் மீனாவுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து முத்து மீனா, க்ரிஷ் இன் உண்மையான அம்மா யார் என்று கண்டுபிடிக்க போகிறார்கள்.