
சிறகடிக்க ஆசை சீரியலில் ஏற்கனவே ரோகிணி வீட்டில் சிக்கி சீரழியும் நிலையில், தற்போது மேலும் ஒரு சம்பவத்தில் மாட்டி கொண்டுள்ளார்.
விஜய் டிவியில் பல வருடங்களாக டாப் இடத்தில் ஓடி கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. ரோகிணி மாட்டுவாரா, என்றே தான் ரசிகர்களும் ஆர்வமாக கதையை கவனித்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரோகிணி பணக்காரி இல்லை என்ற உண்மையை மொத்த குடும்பமும் அறிந்து கொண்டது. இதையடுத்து ரோகிணியை விஜயா அடித்த அடி பலரையும் மெய்சிலிர்க்க செய்தது என்றே சொல்லலாம். பிறகு எப்படியோ வீட்டிற்குள் வந்த ரோகிணி விஜயா மனதை மாற்ற தினசரி போராடி வருகிறார்.
அந்த வகையில் கடந்த வார எபிசோட்களில் விஜயா நடனப்பள்ளியில் கர்ப்பமான ரதியின் வீட்டாரால் பெரிய பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது.
எப்படியோ முத்து இருவீட்டாரிடமும் பேசி பிரச்சனையை தீர்த்து வைத்த நிலையில், தீபன் - ரதி குடும்பத்தினர் இருவரும் சேர்ந்து நடனபள்ளி நடந்த வீட்டின் உரிமையாளரான பார்வதியிடம் சென்று 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் கடுப்பான விஜயா, ரோகிணியை இந்த பணத்தை கொடுக்க சொல்லி கண்டிஷன் போடுகிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், ரவுடியை அணுகுகிறார். சிட்டியும் ஆட்களை அனுப்பி தீபன் வீட்டில் அடிதடி நடத்தியுள்ளார். ஆனால் இந்த பலியோ முத்து மீது சுமத்தப்பட்டது.
அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் கைதான முத்துவை காப்பாற்ற மீனா போராடி கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் சீதாவின் கணவர் அருணும் முத்துவை ஜெயிலில் அடைக்க மேலதிகாரிகளிடம் முறையிடுகிறார். தொடர்ந்து உண்மையை கண்டுபிடித்த மீனா, நேராக காவல் ஆய்வாளரிடம் பேசி சிட்டியை கைது செய்து விட்டார். விசாரணையில் சிட்டி, ரோகிணி தான் இதை செய்ய சொல்லியதாக கூறிவிடுகிறார். இதனால் முத்துவும் - மீனாவும் அதிர்ச்சியில் உறைகின்றனர்.
இந்த நிலையில் நாளைக்கான எபிசோட் புரோமோவில், மீனா வீட்டில் அனைவரிடமும் உண்மையை கூற.. பெண் போலீசார் ரோகிணியை வீடு தேடி சென்று அழைத்து வருகின்றனர். இதனால் சீரியலில் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே பல பிரச்சனைகளில் சிக்கியிருக்கும் ரோகிணி கிரிஷ் விஷயத்தில் எப்போது மாட்டுவார் என எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தடுத்த செயல்களால் வீட்டில் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இனி என்ன நடக்கும் என ரசிகர்களும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கிறார்கள்.