
'சிறகடிக்க ஆசை' சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. எப்போடா ரோகிணி மாட்டுவார் என்ற பலரின் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது. பல நாள் கனவாக இருந்த விஜயாவின் கோபம் தற்போது நிஜமாகவே நிறைவேறியதால் ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கான புரோமோவில் கூட ரசிகர்கள் அனைவரும் கனவுதான் என்று கமெண்ட் செய்தனர். ஆனால் கடந்த 2 நாட்களாகவே இந்த சீரியல் ட்ரெண்டிங்கில் உள்ளது. காரணம் ரோகினி சிக்கியது தான். இன்றைய எபிசோட்டில் ஒரு வழியாக விஜயா ரோகிணியை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுகிறார். மனோஜோ, தாயின் பேச்சை கேட்டு ரோகிணியை பார்க்காமல் வீட்டிலேயே இருக்கிறார்.
தான் பணக்காரி என்ற ரோகிணியின் பில்டப் தற்போது முடிந்துவிட்டதால், விஜயா கடும் ஆத்திரத்தில் இருக்கிறார். ரோகிணியோ தனது தோழி வீட்டில் தங்கி இருக்கிறார். நிச்சயம் மீண்டும் அந்த வீட்டிற்கு செல்வேன் என்று கூறி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அண்ணாமலையும், முத்துவும், மீனாவும் ரோகிணியை வீட்டிற்கு அழைத்து வர என்ன செய்ய வேண்டும் என யோசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சிறகடிக்க ஆசை சீரியலின் எழுத்தாளர் குரு சம்பத் குமார் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், 'ரோகிணி பற்றிய விஷயங்கள் குடும்பத்திற்கு தெரிய வரும்போது அதில் இன்னொரு ட்விஸ்ட் வைத்திருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். 'ரோகிணி விஷயம் தெரிந்தபோது ஒரு லாக் போட்டு, அந்த லாக் திறந்தவுடன் இன்னொரு லாக் விழுந்து விடும்' என கூறியுள்ளார்.
'ரோகிணி ஒரு முக்கியமான கேரக்டர். அவள் அம்மா செய்த திருமணத்தால் அவள் கஷ்டப்பட்டு இருக்கிறாள். அதனால் சில உண்மைகளை மறைத்துள்ளார். ரோகிணி கேரக்டரை வலுப்படுத்த மலேசிய மாமா, ஃப்ரெண்ட் வித்யா போன்ற பல கேரக்டரை உள்ளடக்கியுள்ளோம். ஒவ்வொரு மாதமும் அடுத்த திருப்பம் குறித்து டைரக்டர், சேனல் டீம், ப்ரொடக்ஷன் டீம் ஆகியோர் சேர்ந்து ஆலோசிக்கிறோம். டிஆர்பி குறைந்த இடங்களை பார்க்கிறோம்' என்று கூறினார்.
இதனால் ரோகிணி மொத்தமாக குடும்பத்திடம் மாட்டவில்லை என்று தெரிகிறது. வெறும் மலேசியா பிரச்சனை மட்டும் முடிந்திருக்கிறது. மீண்டும் அவர் வீட்டிற்கு வந்துவிடுவார் என்றும் இன்னும் அவரின் குழந்தை முதல் திருமணம் குறித்த முடிச்சு எப்போது அவிழும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்