விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை வேலைக்குச் செல்கிறார். இதனையடுத்து ரோஹினியின் உண்மை முகம் இப்போதாவது வெளியே வருமா என்பது குறித்துதான் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் தனது தொழிலில் லாபம் கிடைத்ததாக கூறியிருக்கிறார். மேலும் வீடு வாங்கும் யோசனை வைத்திருப்பதாகவும் கூறி, விஜயாவிற்கு தங்க வளையலும், அண்ணாமலைக்கு ஆடையும் வாங்கித் தருகிறார். சும்மாவே விஜயா மனோஜை தூக்கி வைத்துக் கொண்டாடுவார். இந்த லாபக் கணக்கை வீட்டில் சொல்லி சொல்லி இப்போது கொண்டாடுகிறார்.
இதனையடுத்து அண்ணாமலை வேலைக்கு கிளம்புகிறார். குடும்பமே அவரை வழி அனுப்பிவைக்கிறது.
கிராமத்திலிருந்த அம்மாவையும் மகனையும் சென்னையில் வீடு பார்த்து வைத்துவிட்டார் ரோஹினி. மேலும் க்ரிஷை ஒரு பெரிய ஸ்கூலில் சேர்த்துவிட்டிருக்கிறார். அதுவும் பக்கத்தில் இல்லாமல் சற்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக க்ரிஷை பள்ளியில் சேர்த்து விட்டிருக்கிறார்.
தற்போது அதே ஸ்கூலில்தான் அண்ணாமலைக்கு வேலை கிடைத்திருக்கிறது. அவர் பணியிலும் சேர்ந்துவிட்டார். இந்த விஷயத்தை அறிந்துக்கொண்ட ரோஹினி பதற்றத்துடன் சென்று தனது அம்மாவிடம் சொல்கிறார். இதனால், ரோஹினியின் அம்மா அவர்களுக்கு தானாக தெரிவதற்குள், நீயே உண்மையை சொல்லிவிடு என்கிறார். அதற்கு ரோஹினி நான் இந்த உண்மையை சொன்னால், என்னை வீட்டை விட்டு துறத்திவிடுவார்கள் என்று சொல்கிறார்.
அதற்கு அவர் அம்மா, காலில் விழுந்து மன்னிப்புக் கேள் என்கிறார். ஆனால், ரோஹினி, விஜயா மற்றும் மனோஜை நினைத்துதான் பயப்படுக்கிறார். அவர்கள் கண்டிப்பாக தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்று அஞ்சுகிறார்.
அண்ணாமலை க்ரிஷைப் பார்த்துவிட்டால் பெரிய பிரச்னையாகிவிடும். ஒருவேளை அண்ணாமலையை பார்க்க வரும் முத்து க்ரிஷைப் பார்த்துவிட்டாலும் முடிந்துவிடும். எந்தப் பக்கம் திரும்பினாலும் ரோஹினிக்கு ஆபத்துதான். அதற்கு அவரே உண்மையை கூறிவிடுவது நல்லது.
இதுஒரு பக்கம் இருக்க மறுபக்கம் முத்துவுக்கு பல விஷயங்களில் ஏற்கனவே ரோஹினி மீது சந்தேகம் வருகிறது. இதனால், அனைத்தையும் கண்டுபிடிக்கிறேன் என்று முத்து கூறியிருக்கிறார். இதனால் ரோஹினி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.