சிறகடிக்க ஆசை: சிறகடிக்க ஆசையில் கொலு… பாடி அசிங்கப்பட்ட விஜயா!

Siragadikka aasai
Siragadikka aasai
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்தவகையில் இனி வரும் எபிசோட்களில் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

சீரியலில் விறுவிறுப்பை சிறிது குறைத்தாலும், மக்கள் பார்ப்பதை குறைத்துவிடுவார்கள். ஆகையால், வேகமாகவும், விறுவிறுப்பாகவும் ஒரு கதையை முடித்து, அடுத்த கதையைத் தொடங்கி அதே வேகத்துடன் கதையை நகர்த்தி வருகிறார்கள். இப்படி கதைக்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சமில்லாமல் போவதுதான் சிறகடிக்க ஆசை.

அந்தவகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது கொலு கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் இன்னொரு கதையில் விறுவிறுப்பாகவும் கொண்டு செல்கிறார்கள்.

அந்தவகையில் போன வாரம், மீனாவும் முத்துவும் கொலு வைக்கும் முடிவை எடுக்கிறார்கள். கொலு எப்படி வைக்க வேண்டுமென்று மீனா சொல்வதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்ருதி. ஸ்ருதியும் முத்துவும் மீனாவைப் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ரவியிடம் கோவத்தில் இருப்பதால் என்னுடைய பங்கு என 2500 எடுத்துக் கொடுப்பார் ஸ்ருதி.  அதேபோல் இந்த வாரம் கொலு வைக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த வாரம் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ள நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போம். அதாவது ஒருபக்கம் அந்த கடிதம் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடித்த முத்து, எதற்காக இப்படி கடிதம் அனுப்புகிறார், அதற்கு பின் என்ன இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பேன் என்கிறார்.

இன்றைய எபிசோட்டின் முடிவில் அண்ணாமலை வீட்டில் கொலு வைக்கிறார்கள். அப்போது அண்ணாமலை தனது மனைவி விஜயாவை பாட சொல்கிறார்.

இதையும் படியுங்கள்:
அன்று ஏழு அதிசயங்கள்… இன்று ஏழு மாநிலங்கள் – ஆயுதத்தை கையில் எடுத்த ஷங்கர்!
Siragadikka aasai

விஜயாவும் அலைபாயுதே கண்ணா பாடலை பாட ஆரம்பிக்கிறார். அந்தப் பாடலைக் கேட்டு அனைவரும் திக்குமுக்காடுகிறார்கள். அங்குள்ள அனைவரும் தெரித்து ஓடும் அளவிற்கு விஜயா பாடுகிறார். ஆனால், அண்ணாமலை மட்டும் விஜயா பாடி முடித்தவுடன் ஒன்ஸ் மோர் என்று கத்துகிறார். உடனே அனைவரும் அவரைப் பார்த்து ஷாக் ஆகிறார்கள்.

விஜயா மட்டும் தனது பாடலை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டுக்கொள்கிறார். இதனையடுத்து நாளைய எபிசோட்டில் சிறகடிக்க ஆசை சீரியல் கலகலப்பாக நகரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com