விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் மலேசியா ட்ராமா முடிவுக்கு வரப்போகிறது. முத்து ஒரு உண்மையை கண்டுபிடித்துவிட்டார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா வீட்டுக்கு வந்த மருமகள்களிடம் பாரபட்சம் காண்பிக்கிறார். பணக்கார, படித்த மருமகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். ஆனால் படிக்காத மருமகளை அடிமை போல் வீட்டு வேலை வாங்குகிறார்.
ஆனால் இதை கூட பொறுத்துக் கொள்ள முடியும் பெற்ற மகன்களுக்கு இடையே பாரபட்சம் பார்த்து முத்துவை ஏதோ வேண்டாத பிள்ளையாக நினைத்து அவமானப்படுத்தி வெறுத்து வருகிறார். யாரைப் படித்த பணக்கார மருமகள் என்று நினைக்கிறாரோ அவர் பொய் சொல்லி சமாளித்து வருகிறார். ஆம்! ரோஹினி பல பொய்களை சொல்லி இருக்கிறார்.
ரோகிணி தான் ஒரு பணக்கார வீட்டு பெண் என்றும், தன்னுடைய அப்பா மலேசியாவில் இருந்ததாகவும் பொய் சொல்லி வந்தார். ஆனால், முத்துவின் ஒரு திட்டத்தால், ரோகிணி தனது திட்டத்தை மாற்றினார். அதாவது தன்னுடைய அப்பா மலேசியாவில் ஜெயிலில் இறந்துவிட்டதாக கதையை மாற்றினார். அதற்கு மாமாவாக நடிக்க ஒரு கசாப்பு கடைக்காரர் மணி என்பவரை அழைத்து வந்து நடிக்க வைத்தார். இது தெரியாமல் குடும்பமே நம்பிவிட்டது.
இப்படியான சூழலில்தான் தற்போது மணி உண்மையில் யாரென்ற விஷயம் தெரிய வரப்போகிறது.
அண்ணாமலையின் நெருங்கிய தோழர் பரசுராமன் மகள் யாரையோ காதலித்து அவனுடன் போய்விட்டார் என்று அண்ணாமலை இடம் வந்து கண்ணீர் விட்டு புலம்புகிறார். இதை பார்த்த முத்து, அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு உங்க மகளை நான் தேடிப் பிடித்துக் கூட்டிட்டு வருகிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டார்.
மறுபக்கம் அந்த பெண் காதலித்த பையனின் நெருங்கிய உணவினர்தான் கசாப்புக் கடை மணி. முத்து அந்த பெண்ணை கண்டுபிடித்து பரசுராமன் வீட்டுக்கு அழைத்துவர, அப்போது சரியாக மணியும் அந்த பையனும் வீட்டுக்கு வருகிறார்கள்.
மணி எதை எதையோ சொல்லி மலுப்பினாலும், முத்து இது தான் சரியான நேரம் ரோகிணி மாட்டுவதற்கு என்று நினைத்து மணியை உண்டு இல்லைன்னு ஆக்கி உண்மை அனைத்தையும் தெரிந்து கொள்ளப் போகிறார்.
ஆகையால், ரோகிணியின் மலேசியா ட்ராமாவுக்கு ஒரு என்ட் கார்டு வரப் போகிறது.