
நியூமெராலஜி படி பெண்களின் பிறந்த மாதமே அவர்களின் ஆளுமை குணங்களை குறிக்கும். அப்படி எந்த மாதத்தில் பிறந்த பெண்கள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
இந்து மதத்தில் எண் கணிதமும் ஜோதிடத்தின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது. மக்கள் ஜாதகத்தை எந்த அளவு நம்புகிறார்களோ, அந்த அளவு நியூமராலஜியை பார்க்கிறார்கள். ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு அந்த நாள் நன்றாக இருக்கிறதா என்று பார்க்கும் மக்கள், இந்த எண் நமக்கு அதிர்ஷ்டமா என்றும் பார்ப்பார்கள். அதுதான் நியூமராலஜி. ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவர்களின் குணத்தை கண்டுபிடிக்க முடியும் என சொல்லப்படுகிறது. அதுவும் குறிப்பாக பெண்கள் பிறந்த மாதமும், அவர்களின் குணத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி:
ஜனவரி மாதத்தில் பிறந்த பெண்கள் அழகாக மட்டுமின்றி புத்திசாலிகளாகவும் திகழ்வார்கள். இந்த பெண்கள் விலையுயர்ந்த ஆடைகளை விரும்புகிறார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு விஷயத்தின் மீது ஆசைப்படுகிறார்களோ, அதே அளவு அதை சீக்கிரம் வெறுத்தும், சலித்தும் விடுவார்கள்.
பிப்ரவரி:
பிப்ரவரியில் பிறந்த பெண்கள் புத்திசாலிகள் தான், ஆனாலும் தந்திரமாக செயல்படுவார்களாம். அவர்களின் ஆளுமை கவர்ச்சிகரமானது. ஆனால் அவர்கள் இயற்கையாகவே கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.
மார்ச்:
இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் மென்மையான இயல்புடையவர்கள். தூய்மை எண்ணம் கொண்டிருப்பதால் மற்றவர்களுக்கு மிகவும் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
ஏப்ரல்:
ஏப்ரல் மாதம் பிறந்த பெண்கள் மென்மையானவர்களாக இருப்பார்கள். அவர்களின் செயல்கள் மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாகவும் இருப்பதால் பலரும் அவர்களை நேசிப்பார்கள்.
மே:
மே மாதத்தில் பிறந்த பெண்கள் கடின உள்ளமும், பிடிவாத குணம் உடையவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை விரைவாக ஈர்க்கும் குணத்தை கொண்டிருப்பார்களாம். மிகவும் மன வலிமையும், மன உறுதியும் இருப்பதால் அவர்கள் விரைவில் கோபப்படுவார்களாம்.
ஜூன்:
ஜூன் மாதத்தில் பிறந்த பெண்கள் சிறந்த ஆளுமையை கொண்டிருப்பார்கள். மேலும் அவர்கள் நன்றாக ஊர்சுற்றுவார்களாம். இந்த மாத பெண்கள் கலை மற்றும் படைப்பாற்றல் மீது ஈர்க்கப்படுகிறார்கள்.
ஜூலை:
ஜூலை மாதத்தில் பிறந்த பெண்கள் எப்போதும் மற்றவர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்புவார்களாம். நேர்மையான எண்ணமும், மற்றவர்களை புரிந்து கொண்டு நடக்கும் இயல்பும் இவரிகளிடம் உண்டு.
ஆகஸ்ட்:
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த பெண்கள் தைரியமாக செயல்படுவார்களாம். இந்த பெண்கள் ரிஸ்க் எடுப்பதை அசால்ட்டாக செய்வார்களாம். சத்தமாக பேசக்கூடிய இயல்பை கொண்டிருப்பார்கள். இசையில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
செப்டம்பர்:
இந்த மாதம் பிறந்த பெண்கள் அவசரமாக எந்த முடிவையும் எடுத்து பின் வருத்தப்படுவார்களாம். இந்த பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள். அச்சமற்றவர்களாக இருப்பார்கள்.
அக்டோபர்:
அக்டோபர் மாதத்தில் பிறந்த பெண்கள் அதிகம் பேச விரும்புவார்கள். அவர்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மற்றவர்கள் கடினமாக பேசினால் கூட எளிதில் கவலையடைவார்கள். இந்த மாத பெண்கள் மிகவும் புத்திசாலிகளாக திகழ்வார்களாம்.
நவம்பர்:
நவம்பரில் பிறந்த பெண்கள் தங்கள் சொந்த விஷயத்தை வெளியில் சொல்ல மாட்டார்கள். எப்போதும் ரகசியம் காப்பார்கள். தங்கள் வேலையில் கரெக்டாக இருப்பார்களாம். எல்லாரிடமும் இருந்து தனித்துவமாகவே வாழ்வார்களாம். இவர்களை எல்லாருக்கும் பிடிக்குமாம்.
டிசம்பர்:
இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் அதிக விஸ்வாசமும், லட்சியம் கொண்டவர்களகா இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் மிகவும் அன்பாக பேசுவார்களாம். எந்த ஒரு விஷயத்தையும் முன்னோக்கி சிந்திப்பார்களாம்.