விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி தனக்காக இவ்வளவு செய்திருக்கிறாளா என்பதை நினைத்து உருகிப் போகிறார் மனோஜ். அப்படி என்ன ரோஹினி செய்தார் என்பதைப் பார்ப்போம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா ரோஹினியை தூக்கி வைத்துக் கொண்டாடி வந்தார். அதேபோல், முத்து ரோஹினியின் உண்மை முகத்தை வெளியே கொண்டு வரப் போராடி வந்தார். ஆனால் எந்த முயற்சியும் செய்யாமல் தானாகவே சில உண்மைகள் தெரிந்துவிட்டன. இன்னும் தனக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் உண்மையை மட்டும் மறைத்து வருகிறார். அது எப்போது வெளிச்சத்திற்கு வரும் என்றுதான் தெரியவில்லை. ஆனால், முத்துவிற்கு ரோஹினி இன்னும் ஏதோ ஒரு உண்மையை மறைப்பது போல் தோன்றிவிட்டது.
குடும்பமே ரோஹினியை எதிரியாக பார்க்கும் நேரத்தில், மனோஜ் மட்டும் தனது மனைவிக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்.
இன்றைய எபிசோடில், முத்து சவாரி முடிந்து வரும்போது முருகனைப் பார்க்கிறான். முருகன் தனக்கு பிறந்தநாள் என்று கூறி ஸ்வீட் கொடுக்கிறான். மேலும் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அப்பெண்ணின் வீட்டில் இதை சென்று கூறப்போவதாகவும் கூறியிருந்தான். உடனே முத்து, ‘சரி அருகில் ஒரு கோவில் இருக்கிறது. அங்கு போய் வேண்டிக்கொண்டால், நினைத்தது நடக்கும்.’ என்று அங்கு அழைத்துச் செல்கிறான்.
மறுபக்கம் அம்மாவிடம் போய் மீனா பேசுகிறாள். வீட்டில் நடந்த அனைத்தையும் பேசிவிட்டு சீதாவைப் பார்க்க கோவில் செல்கிறாள். அப்போது அருண் அங்கு வந்து அவளை சந்தித்து பேசுகிறான். நம்ம காதலை எப்போ வீட்ல சொல்லலாம். என் அம்மாக்கிட்ட சொன்னா, உடனே எங்கம்மா பொண்ணு கேட்டு வந்துடுவாங்க என சொல்கிறான். ஆனால், சீதா இப்போதைக்கு வேண்டாம். கொஞ்ச நாள் பழகுவோம், பேசுவோம் என்று கூறி அனுப்பி வைக்கிறாள்.
இதனை தொடர்ந்து சீதாவை பார்த்து பேசுகிறாள் மீனா. இதனிடையில் அதே கோயிலுக்கு முருகனை அழைத்து கொண்டு முத்து வருகிறான். மீனாவும், சீதாவும் அவர்களைப் பார்த்து கலாய்க்கின்றனர். இன்னும் இவரோட சேர்ந்து சுத்துறதை விடலையா? இவர் பேச்சை கேட்டு எங்கயாவது போய் அடி வாங்கிடாதீங்க என கிண்டல் அடிக்கிறாள் மீனா.
மனோஜ் ஷோ ரூமில் இருக்கும்போது, ஒருவர் வந்து உங்க பேரில் இன்ஸுரன்ஸ் போட்டு இருக்காங்க, நீங்க ரொம்ப லக்கி சார். மேடம் உங்களுக்கு பெஸ்ட் பாலிஸி போட்டுருக்காங்க என்று கூறுகிறான். அப்போது மனோஜ் உருகிவிட்டார்.
பின் கோவிலில் மனோஜ் இருக்கும்போது, ஒருவர் வந்து, உங்களுக்கு கண் ஆப்ரேஷன் பண்ணும்போது, மேடம் வந்து பூஜை செய்தாங்க என்று கூறியவுடன். மனோஜ் ரோஹினியை நினைத்து மிகவும் ஃபீல் செய்கிறார்.