விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், மீனா ஒரு பெரிய பண சிக்கலில் மாட்டப் போகிறார். இதுதெரியாமல், முத்துவும் மீனாவும் மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டப் போகிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதியின் அம்மா விஜயா வீட்டுக்கு வந்து சண்டைப் போட்டு போகிறார். இதனால், ரவிக்கும் ஸ்ருதிக்கும் இடையே விரிசல் ஏற்படுகிறது. ரவி மொட்டைமாடியில் தனியாக நிற்கிறான். அப்போது மனோஜும் முத்துவும் வந்து அவனுக்கு அட்வைஸ் செய்கிறார்கள். வழக்கம்போல் இருவரும் அப்படியே மாற்றி மாற்றி அட்வைஸ் செய்கிறார்கள். அதாவது மனோஜ் நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணாதே என்று சொல்கிறார்.
முத்து, தன்மானம் தான் முக்கியம் மாமனார் சம்பாத்தியத்தில் நாம் முன்னேற கூடாது என்று அட்வைஸ் பண்ணுகிறார். ஆனால், இறுதியில் ரவி, வெற்றியோ தோல்வியோ அது என்னோட முயற்சியால் மட்டுமே நடக்க வேண்டும் என்று கூறிவிடுகிறார்.
இதேபோல் சமையலறையில் மீனா, ரோகிணி, ஸ்ருதி மூவரும் பேசுகிறார்கள். அதேபோல், ரோகிணி தவறாக வழி நடத்துகிறார். மீனா நியாயம் தர்மம் தன்மானம் என்று பேசி சுருதிக்கு புரிய வைக்க பார்க்கிறார். கடைசியில் மீனா மற்றும் ரோகினிக்கு சண்டை வந்தது தான் மிச்சம், சுருதிக்கு இரண்டு பேர் பேச்சையும் கேட்டு குழம்பியதால் எதுவும் பேசாமல் வாயை மூடுகிறார்.
இதனையடுத்து மீனாவுக்கு ஒரு கல்யாண ஆர்டர் வந்திருக்கிறது. சுமார் 2 லட்சம் ஆர்டர். உடனே மீனா சந்தோஷப்படுகிறார். அந்த மண்டபத்தின் ஓனர் ஒரு அக்ரீமன்ட்டில் கையெழுத்திட கூறுகிறார். எதுவும் யோசிக்காமல் அவரும் கையெழுத்திடுகிறாள். சந்தோஷமாக வீட்டில் வந்து இந்த விஷயத்தை கூறுகிறார். முத்து மிகவும் சந்தோஷப்படுகிறார்.
ஆனால், விஜயா ரோகிணிக்கு பொறாமையாக இருக்கிறது. அண்ணாமலையோ மீனாவை புகழ்ந்து தள்ளுகிறார்.
ஆனால், மீனா போட்ட அந்த கையெழுத்துதான் மிகப்பெரிய ஆப்பாக மாறுகிறது. அதாவது அந்த ஆர்டர் மீனாவுக்கு கிடைப்பதற்கு காரணம் சிந்தாமணி தான். அந்த அக்ரீமெண்டில் கையெழுத்து வாங்கியதும் சிந்தாமணி தான். அதன்படி அந்த அக்ரீமெண்டில் மீனாவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக சில சதிகளை சிந்தாமணி பண்ணி இருக்கிறார்.
மீனாவின் பிசினஸை முழுவதுமான முடிக்கத்தான் இதெல்லாம் செய்திருக்கிறார். இதையறிந்த விஜயா மன நிம்மதி அடைகிறார்.