Siragadikka aasai: மீனா செய்த செயலால் கடும்கோபத்தில் முத்து… அடுத்தடுத்த பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளும் மீனா!

Siragadikka aasai serial update
Siragadikka aasai serial update
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கவுள்ளது என்பதைப் பார்ப்போம்.

சிறகடிக்க ஆசை தொடர் பலருக்கும் பிடித்தமானத் தொடராக இருந்து வருகிறது. அந்தவகையில், முத்துவின் நண்பர் செல்வம் தனது பெற்றோரில் 60 வது கல்யாணத்தை  பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், கையில் போதிய பணம் இல்லாததால் குடித்துவிட்டு முத்துவிடம் புலம்புகிறார் செல்வம்.

உடனே செல்வம் நீ கவலைப்படாதே நான் பணம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு மீனாவிடம் வந்து போட்டியில் கலந்துக்கொண்டு ஜெயித்த பணத்தைக் கேட்கிறார். ஆனால், மீனா இது தேவையில்லாத ஆடம்பர செலவு என்று கூறித் தரவில்லை. அத்துடன் செல்வத்திடமே நேரடியாக சென்று, நம்முடைய சக்திக்கு மீறி செலவு செய்யக்கூடாது. அப்படி செலவு செய்தால் அதன்பின் நாம் மட்டும் இல்லாமல் நம்முடைய குடும்பமும் கஷ்டப்படும். அதனால் நம்மால் என்ன முடியுமோ அதை தான் செலவு செய்து நிம்மதியாக வாழ வேண்டும் என்ற அட்வைஸ் பண்ணி வந்தார்.

இது தெரியாமல் முத்து சென்று பணத்தை செல்வத்திடம் கொடுத்துவிடுகிறார். ஆனால், அவர் வாங்க மறுத்ததால், என்ன காரணம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு செல்வம் மீனா வந்ததையும் பேசியதையும் கூறியிருக்கிறார். உடனே கோபப்பட்டு முத்து மீனாவிடம் வந்து சண்டையிடுகிறார். பொருமையாக மீனா விளக்கிக் கொண்டிருந்தார். ஆனால், முத்து அந்த பணத்தை கொடுத்துவிட்டதாக கூறிய பின்னர் மீனா கோபமாகத் திட்டிவிடுகிறார். இதனால், முத்து கை ஓங்குகிறார்.

இதனையடுத்து முத்து, வழக்கம்போல் செல்வத்தின் அப்பா அம்மா ஃபங்ஷனுக்கு கிளம்புகிறார். அப்பொழுது அண்ணாமலை இது உன் மனைவியுடன் போக வேண்டிய ஒரு சிறந்த ஃபங்ஷன். அதனால் மீனாவையும் கூட்டிட்டுப்போ என்று சொல்ல மீனாவை முத்து கூட்டிட்டு போகிறார். ஆனால் போகும் பொழுது மீனா மீது முத்து கோபத்துடனே இருந்தார்.

இதையும் படியுங்கள்:
‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலில் சௌகார் ஜானகி அணிந்திருந்த உடைக்குப் பின்னால் உள்ள கதை இது!
Siragadikka aasai serial update

ஆனால், நிகழ்ச்சியில் செல்வம் ஆடம்பர செலவு செய்ததை முத்து நேரடியாகப் பார்த்து தனது தவற்றைப் புரிந்துக் கொண்டார். அங்கு எந்த பிரச்னையும் செய்யக்கூடாது என்று இருவரும் சாப்பிட உட்காருகின்றனர். அங்கு செல்வத்திற்கும் சொந்தக்காரர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் செல்வத்தை அவர்கள் அடித்துவிடுகிறார்கள். அதனால், முத்து செல்வத்தின் மாமாவை அடித்துவிடுகிறார். கடைசியில் செல்வம் வீட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முத்துவை அடித்து கீழே தள்ளி அவமானப்படுத்தி அசிங்கப்படுத்தும் அளவிற்கு பேசி விட்டார்கள்.

மற்றொருபுறம் ரோகிணி மற்றும் லோக்கல் ரவுடி சிட்டிபாபு மூலம் முத்து மற்றும் மீனாவுக்கு பிரச்னை வரக் காத்துக் கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து முத்து மீனாவுக்கு பிரச்னையும் அவமானமும் வந்து கொண்டிருக்கிறது.

 

logo
Kalki Online
kalkionline.com