புது ஆளை வீட்டுக்கு அழைத்து வந்த ரோகிணி… கோபத்தில் முத்து மீனா!

Siragadikka aasai
Siragadikka aasai
Published on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவும் மீனாவும் இன்னும் கோபமாக உள்ளார்கள். மேலும் ரோகிணி சமையல் வேலை செய்வதற்கு வீட்டுக்கு ஒரு பெண்ணை அழைத்து வருகிறார்.

முத்து மீனா சண்டை இன்னும் முடிந்தபாடில்லை. மற்றொரு பக்கம் சீதா தனது மாமியார் வீட்டுக்கு செல்கிறார். அனைவரும் அறிவுரை கூறி அனுப்புகிறார்கள். மேலும் முத்துவை பெருமையாக பேசினார்கள். இதை அருணால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதன்பின் முத்து, மீனா சாப்பாடு எடுத்து வந்திருக்கும் செய்தியை கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டார்.

இப்படியான நிலையில், முத்துவுக்கு எங்குப் பார்த்தாலும் மீனாவே தெரிகிறார். ஆகையால் முத்து நேராக மீனாவின் பூக்கடை பக்கம் செல்கிறார். அப்போது மீனாவின் தோழிகள் முத்துவை வம்பு இழுத்து பூ வாங்கும் இடத்தில் விட சொல்லி கேட்டதால் முத்துவுமே அவர்களை ஏற்றிக் கொண்டு சென்றார்.

அப்போது மீனாவின் தோழிகள் கணவன் மனைவி சண்டையெல்லாம் சகஜம்தான், அடித்துக்கொள்வார்கள், பின் பேசிக்கொள்வார்கள் என்று பேசிக்கொண்டு வந்தனர். ஆனால், மீனாவும் முத்துவும் பேசிக்கொள்ளவில்லை. மனதில் வருத்தப்பட்டார்கள்.

மற்றொருபக்கம் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும், ஷோ ரூமில் இருந்தார்கள். அப்போது கணவன் மனைவி இருவர் வேலைக் கேட்டு வந்தார்கள். ஆனால், மனோஜ் ஒருவருக்குதான் வேலை இருக்கிறது என்று கூறினார். உடனே ரோகிணி, வீட்டிற்கு சமையல் செய்ய ஆள் வேண்டும். அதனால் ரெண்டு பேரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

இதையும் படியுங்கள்:
‘மறைக்கப்பட்ட புதையல்’: ரூ.1.7 கோடிக்கு ஏலம் போன ‘மகாத்மா காந்தி’யின் அரிய ஓவியம்..!
Siragadikka aasai

அந்த பெண்ணை ரோகிணி வீட்டில் அழைத்து வந்து, மீனா வரும் வரை இவள் சமைக்கட்டும் என்று கூறியவுடன், விஜயாவும் சம்மதிக்கிறார்.  அவர் போய் சமைக்கிறார். ஆனால், ராணி சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு, குடும்பமே காரம் என்று கத்திக்கொண்டிருக்கிறது. ரோகிணி மட்டும் சமாளித்துக்கொண்டார். ஆனால், விஜயா இனிமேல் இவளை கிச்சன் பக்கமே அனுப்பாதே. உன்னுடைய ஷோரூமில் வைத்துக் கொள்ளு என்று திட்டி விடுகிறார். இப்போது மீனாவின் அருமை புரிகிறதா? என்று பேசிக்கொள்கிறார்கள்.

கார் டெக்கரஷேன் செய்ய மீனா வந்தபோது அங்கு முத்துவும் வருகிறார். அவரைப் பார்த்ததும் மீனா சந்தோஷப்பட்டாலும், ஈகோவால் எதுவும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அதேபோல், ஸ்ருதி அம்மா ரோஹினி பாக்க ஷோரூம் வருகிறார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, ரோகிணி டைம் கேட்கிறார். உடனே ரவி வேலை செய்யும் இடத்திற்கு சென்று நீத்துவை பற்றி விசாரிக்க சொல்ல, ரோகிணி முடியாது என்கிறார். இதனால் ஸ்ருதியின் அம்மா ரோகிணியை மிரட்டுகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com