சிறகடிக்க ஆசை: முத்து மீனாவை பழி வாங்க ரோகிணி போட்ட திட்டம் தோல்வி…!

Siragadikka Aasai
Siragadikka Aasai
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் ரோகிணி, முத்து மற்றும் மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்.

முத்துவிடம் இருக்கும் ஒரு வீடியோவை எடுத்துவிட்டால் திட்டம் நினைத்தப்படி நடந்து முடியும் என்றும் ரோகிணி நினைக்கிறார். அதற்காக முத்து மற்றும் மீனா குடிக்கும் பாலில் தூக்க மாத்திரையை கலந்துவிடுகிறார். இருவரும் அதைக் குடித்துவிட்டு நன்றாக தூங்குகிறார்கள். பின் ரோகிணி நடுராத்திரியில் வந்து முத்துவின் போனை யாருக்கும் தெரியாமல் எடுக்கிறார். அப்போது விஜயா சரியாக வந்து ரோகிணி என்று அழைக்கிறார்.

உடனே ரோகிணி தூக்கம் வரல, டீ குடிக்கலாம்னு நினைத்தேன், டீ பவுடர் எங்க இருக்குனு தெரியல, அதா மீனாவ எழுப்ப வந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறார். விஜயாவும் மீனா என்னைப் பார்த்து ஏன் சிரித்தாள் என்று தெரியவில்லை, அதனால்தான் தெரிந்துக்கொள்ள வந்தேன் என்று பதிலுக்கு கூறுகிறார்.

இதைக் கேட்ட ரோகிணி இதெல்லாம் ஒரு விஷயமா, பாத்துக்கலாம் நீங்க போய் தூங்குங்க என்று விஜயாவிடம் சொல்கிறார். அதற்கு விஜயா உனக்கும் தூக்கம் வரல எனக்கும் தூக்கம் வரல நாம் பேசிக்கொண்டு இருப்போமா? என்று கேட்கிறார். அதற்கு ரோகிணி இல்லை எனக்கு இப்போ தூக்கம் வந்துவிட்டது என்று சொல்லி ரூமுக்குள் போகிறார்.

மீண்டும் விஜயா போனதும் ரோகிணி முத்து ரூமிற்குள் வந்து போனை எடுக்க வருகிறார். அப்போது மனோஜ் ரோகிணியை தூக்கி சுற்றுகிறார். உடனே ரோகிணி இங்க இந்த நேரத்துல என்ன பண்றீங்க என்று கேட்கிறார். அதற்கு மனோஜ் அவர் கண்ட கனவைப் பற்றி சொல்ல அவரை ரூமிற்குள் அழைத்துச் செல்கிறார். ரோகிணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததால் ப்ளான் சொதப்பிவிடுகிறது.

இதையும் படியுங்கள்:
காலம் கடந்து நிற்கும் கவியரசர் கண்ணதாசன்!
Siragadikka Aasai

மறுபக்கம் விஜயா பரதநாட்டியம் சொல்லித் தரும்போது மீனா சிரித்ததை நினைத்து சொல்லித்தருவதில் சொதப்புகிறார். உடனே பார்வதி என்ன பரதநாட்டியம் மறந்துப்போய்விட்டதா? என்று கேட்கிறார். அப்போது மீனா செய்ததை குறித்து சொல்லி விஜயா புலம்புகிறார்.

அடுத்ததாக மனோஜ், ஷோரூம் கடையில் இருக்கும் பொழுது பாடி பில்டராக வேலை பார்த்தவர் முத்துவிடம் அடி வாங்கிட்டு போனதால் அவருக்கு தெரிந்த நபர்களை கூட்டிட்டு கடைக்கு வருகிறார். அவர்கள் பணம் மிரட்டி கேட்கின்றனர். மனோஜ் இல்லை என்று சொன்னதும் கடையில் புகுந்து அடாவடி செய்கிறார்கள். மனோஜ் ஏமாந்துப் போய் நிற்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com