கணவருக்கு கார் வாங்கி கொடுத்த மீனா... சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்!

Siragadikka Aasai
Siragadikka Aasai

விஜய் டிவியின் டிஆர்பியில் முன்னனி இடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை களத்தை எட்டியுள்ளது.

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா. இதனால் முத்து, மீனாவிற்கு பூக்கடை திறந்து கொடுக்கிறார். இது நல்ல முறையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் இதுவரை ஒளிபரப்பான கதைக்களத்தில் முத்து, மீனாவிற்காக ஒரு பெரிய ஆரடர் பிடித்து கொடுக்கிறார்.

500 மாலைகள் கட்டிக் கொடுத்தால் 2 லட்சத்திற்கு மேல் பணம், இரவு முழுவதும் கண் முழுத்து மீனா மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் மாலை கட்டி எப்படியோ முடித்துவிட்டார்கள். அதை மண்டபத்திற்கு கொண்டு செல்லும் நேரத்தில் சிட்டி வண்டியை தூக்க எப்படியோ பல போராட்டத்திற்கு பிறகு முத்து-மீனா மாலையை சொன்னபடி கொடுத்துவிட்டார்கள், பணமும் பெற்றுவிட்டார்கள். இதனால் இருவரும் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் திழைத்து விட்டார்கள் என்று சொல்லலாம்.

இது ஒரு புறம் இருக்க, ரோஹினி அவரது பெயரில் பார்லர் நடத்தும் விஷயம் வீட்டிற்கு தெரிந்து ரணகளமாகியுள்ளது. முத்துவுக்கு வீட்டில் வாங்கி கொடுத்த காரை விற்று, தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான் முத்துவும் வீட்டில் சிக்கி கொண்டார். ஆனால் யாரிடமும் அதற்கான காரணத்தை கூறாத நிலையில், கணவருக்காக மீனா கார் வாங்கி கொடுக்க ஆசைப்படுகிறார்.

அதன் படி வரும் வாரத்திற்கான புரோமோவில், கணவர் முத்துவுக்காக மீனா ஒரு காரை சர்ப்ரைஸாக வாங்கி கொடுக்கிறார். இதனை பார்த்து நெகிழ்ச்சியடைந்த முத்து, மனைவியை முன் சீட்டில் அமரவைத்து ஊர்சுற்றுகிறார். இந்த புரோமோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
சொந்த செலவில் சமூக நலப்பணிகள்! KPY 'பாலா'விற்கு குவியும் பாராட்டுக்கள்!
Siragadikka Aasai

சீரியலில் எப்போதும் கெட்ட பெயர் எடுப்பவர் மனோஜ். அப்படியுள்ள மனோஜின் பிறந்தநாளை சீரியல் குழு சூப்பராக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படமும் இணையத்தில் வைரலாக பலரும், மனோஜிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com