சிறகடிக்க ஆசை: குண்டைத் தூக்கிப் போடும் விஜயா… அதிர்ச்சியில் முத்து மீனா!

Siragadikka aasai serial update
Siragadikka aasai
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சிறகடிக்க ஆசை சீரியலில் மிகப்பெரிய பலியை மீனாமீது தூக்கிப் போடும் விதமாக விஜயா பேசுகிறார். இதுகுறித்து ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளதைப் பார்ப்போம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் கம்பெனிக்கு விளம்பரம் எடுக்க சந்தோஷி சொல்கிறார். இதற்கு நடிப்பவர்களுக்காக இரண்டு லட்சம் தருகிறார்.  அதுவும் மனோஜ் குடும்பத்தினரையே நடிக்க வைக்க வேண்டும் என்று கூறுகிறார் சந்தோஷி. உடனே மனோஜ் பணத்தைப் பற்றி வீட்டில் கூறாமல், தானே அதை வைத்துக்கொள்ளலாம் என்று யோசிக்கிறார்.

பின் நடிப்பதை மட்டும் வீட்டில் கூறுகிறார். அனைவரும் ஷாக் ஆகிறார்கள். ஆனால், முத்து வேலைய விட்டுட்டு நடிக்க வறதுக்கு காசு கொடுக்கனும்ல என்கிறார். அப்போது ஸ்ருதியும், ஆமாம். பொதுவாவே ஒரு நாள் நடிச்சாலும் பணம் கொடுப்பாங்க என சொல்கிறார்.

ஆனால், நான் வரவில்லை என்று முத்து கூறியதும், சந்தோஷி சார் தான் உன்ன கட்டாயம் நடிக்கனும் சொல்லிருக்கிறார் என்றார் மனோஜ். உடனே அவருக்காக முத்து நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார். பின்னர் மனோஜ் விஜயாவை மட்டும் தனியாக அழைத்து 10 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். உனக்கு மட்டும்தான் காசு வச்சுக்கோ என்று. அடுத்த நாள் ஷூட்டிங் நடக்கிறது. அண்ணாமலையும் விஜயாவும் ஓனராகவும், பணக்காரர்களாக ரோகிணியும் மனோஜும், மிடில் கிளாஸ் ஃபேமிலியாக ரவி மற்றும் சுருதி, பிறகு ஏழை குடும்பமாக முத்து மற்றும் மீனா நடிக்கின்றனர்.

ஷூட்டிங்கிற்கு வந்த ஆள் சந்தோஷி சார் கொடுத்த பணத்தைப் பற்றி கோவத்தில் சொன்னவுடன் அனைவரும் ஷாக் ஆகின்றனர். மனோஜ் ஷுட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறம் குடுக்கலாம்னு இருந்தேன் என்று சொல்லி சமாளிக்கிறார்.

எப்படியோ மனோஜிடம் இருந்து குடும்பத்தினர் காசை வாங்கிவிட்டனர். பணத்தை வாங்கிய மீனா, முத்துவின் கடனை அடைத்துள்ளார், அண்ணாமலையும் முத்துவின் டியூ கட்ட அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
Nayanthara - Beyond the fairy tale - "நான் அந்த ரிலேஷன்ஷிப்ல இருந்தது உண்மைதான்!" நயன்தாரா வெளிப்படை (or) வெளிப்படையான ஆவணப்படம்!
Siragadikka aasai serial update

அந்தக் காட்சிகள் கொஞ்சம் எமோஷ்னலாக செல்கிறது. பின் மீனா, பார்வதி வீட்டிற்கு பூ கொடுக்க செல்கிறார், அங்கு விஜயா வழக்கம் போல் அவரை அவமானப்படுத்துகிறார்.

அந்தவகையில் ப்ரோமோவில், விஜயா பார்வதியின் பணம் காணாமல் போனது போல் பேசுகிறார்.

பின் வீட்டிற்கு யாரும் வரவில்லையே பின் எப்படி பணம் காணாமல் போயிடும் என்று கூறி உன் வீட்டிற்கு மீனா தானே வந்தாள் என கூறுகிறார். இதைக்கேட்டு முத்துவும் மீனாவும் ஷாக் ஆகி நிற்கிறார்கள். 

logo
Kalki Online
kalkionline.com