Nayanthara - Beyond the fairy tale - "நான் அந்த ரிலேஷன்ஷிப்ல இருந்தது உண்மைதான்!" நயன்தாரா வெளிப்படை (or) வெளிப்படையான ஆவணப்படம்!

Nayanthara - Beyond the fairy tale
Nayanthara - Beyond the fairy tale
Published on

"நான் அந்த ரிலேஷன்ஷிப்ல இருந்தது உண்மைதான். நான் உண்மையாக இருந்தேன். அந்த பிரேக் அப்ல இருந்து மீண்டு வர மிகவும் கஷ்டப்பட்டேன்."

'Nayanthara - Beyond the fairy tale ' என்ற ஆவணப்படத்தில் இப்படி வெளிப்படையாக பேசியுள்ளார் நயன்தாரா.

தமிழ் நாட்டில் தனுஷ் - நயன்தாரா மோதல் சென்சிடிவாக பேசப்பட்டு  வரும் சூழ்நிலையில், நயன்தாரா பிறந்தநாளான நவம்பர் 18 அன்று இந்த ஆவணப்படம் நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அமீத் கிருஷ்ணன் இந்த ஆவணப் படத்தை இயக்கியுள்ளார்

நயன்தாரா பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தது, சில ஹீரோக்களுடன்  இணைத்து கிசுகிசுக்கப்பட்டது, விக்னேஷ் - நயன்தாரா திருமணம் போன்ற விஷயங்களை நம் தமிழ் நாட்டு ரசிகர்கள் ஊடகங்களில் படித்தும், பார்த்தும் தெரிந்து கொண்டார்கள். நயன்தாரா சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு  முன்பு, அறிமுகம் ஆன புதிதில் பார்த்த அம்சங்கள், புகழ் பெற்ற பின்பு சினிமாவை விட்டு சில காரணங்களால் செல்ல முடி வெடுத்தது போன்ற நயன்தாராவை பற்றி பலரும் அறியாத செய்திகள் இப்படத்தில் உண்டு.

ஆரம்பத்தில் சினிமாவில் நடிக்க மறுத்திருக்கிறார் நயன்தாரா. அப்பாவுக்கு ராணுவத்தில் வேலை, அம்மா ஹோம் மேக்கர். அண்ணன் துபாயில் இருக்கிறார். எளிமையான குடும்பம் என இருக்கும் நயன்தாராவை திருவல்லா பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் பிரபல டைரக்டர் சத்தியன் அந்திக்காடு பார்த்திருக்கிறார். நயன்தாராவை தன் அடுத்த படத்தில்  நடிக்க வைக்க நயன் வீட்டில் அனுமதி கேட்டிருக்கிறார். ஆச்சாராமன கிறிஸ்துவ குடும்பம் நடிக்க அனுமதி தரவில்லை. இரவு முழுவதும் யோசித்த நயன்தாரா மறுநாள் அதிகாலை 3 மணிக்கு சத்தியன் அந்திகாடுக்கு போன் செய்து "எனக்கு நடிக்க ஆர்வம் இருக்கிறது; ஆனால் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள்" என்று சொல்லி இருக்கிறார். 

சத்தியன் அந்திக்காடு "நீ இரண்டு தவறுகளை செய்திருக்கிறா. ஒன்று இந்த அதிகாலை எனக்கு போன் செய்தது; மற்றொன்று சினிமாவில் நடிக்க மறுத்தது," என்று சொல்லிவிட்டு மறுநாளே வீட்டில் வந்து புரிய வைத்து நடிக்க வைத்திருக்கிறார். இந்த விஷயத்தை சத்தியன் ஆவணப் படத்தில் விவரிக்கும் போது 'ஆஹா வாழ்க சத்யன்' என்று சொல்ல தோன்றுகிறது. டயானா மரியம் குரியனை நயன்தாரா என பெயர் மாற்றம் செய்தது இந்த சத்யன்தான். 

ராதிகா, ராணா நாகர்ஜுனா இன்னும் பல திரை பிரமுகர்கள் நயன்தாராவை பற்றி  பேசும்போது  நயனின் தைரியத்தை பற்றி தவறாமல் குறிப்பிடுகிறார்கள். 

நயன்தாராவின் தாயார் தன் மகளை பற்றி "என் மகள் எனக்கு கிடைத்த பொக்கிஷம்" என்று சொல்லும் போது அவர் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்கிறது.

குடும்பம், காதல், கணவர் விக்னேஷ் என பல விஷயங்களை சரளமாக பேசும் நயன்தாரா, இரண்டு இடங்களில் சற்று சோகமாகிறார். ஒன்று சுய நினைவு இன்றி இருக்கும் தன் தந்தை பற்றி பேசும் போது. மற்றொன்று சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் மீது அன்பு வைத்து அதனால் தான் சந்தித்த பிரச்சனைகளை பற்றி பேசும் இடத்தில்.. "ஆம் நான் மன உளைச்சலில் இருந்தேன். சினிமாவை விட்டு போக நினைத்தேன்" என்கிறார் தைரியமாக. நயன்தாரா பேசும் போது அதற்கு ஏற்றார் போல அவர் நடித்த படங்களில் இருந்து பாடல்களும், காட்சிகளும் இடம் பெற்றிருப்பது சிறப்பு.

இதையும் படியுங்கள்:
நயன்தாரா - கல்யாண வீடியோவும் பத்து கோடி ரூபாய் வழக்கும்!
Nayanthara - Beyond the fairy tale

"உளுந்தூர்பேட்டை நாய்க்கு ஆம்பூர் பிரியாணியா" என தன் காதலை பற்றி வந்த மீம்ஸ்கள் முதல், நயன்தாராவுடன் சேர்ந்து ரோட்டு கடையில் சாப்பிட்ட அனுபவம் வரை, பல ரொமான்ஸ் விஷயங்களை விக்னேஷ் சிவன் கேசுவலாக பகிர்ந்து கொள்கிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணம், திருமணத்தின் போது கலந்து கொண்ட பிரபலங்கள், நயன்தாரா அணிந்திருந்த காஸ்டியூம், ஆடை என திருமணத்தின்  சிறப்பான தருணங்கள் ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளன.

"திருப்பதியில் திருமணம் செய்வது முடியாத காரியம்" என்று திருமண ஏற்பாட்டாளர் சொல்வது தொடங்கி, நயன்தாராவின் சினிமா பயணத்தை பற்றி பதிவு செய்துவிட்டு, திருமணம் இரண்டு குழந்தைகள் என்று முடிகிறது இந்த ஆவணப்படம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com