விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் முடிவுகளுக்கு துணையாக இருக்கும் முத்துவின் அலப்பறைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் ரோகிணி.
க்ரிஷை தத்தெடுக்க வேண்டும் என்ற மீனாவின் முடிவுக்கு முத்து துணையாக இருக்கிறார். இருவரும் இந்த முடிவை க்ரிஷ் பாட்டியை கேட்காமல் எடுக்கின்றனர். பின் பாட்டியை சம்மதிக்க வைக்க டார்ச்சர் செய்கின்றனர். அதனால்தான் வீட்டில் கொலு வைத்ததாக சொல்லி பாட்டியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்தார்கள்.
ஆனால், பாட்டி வருவதற்கு முன் ரோகிணிக்கு போன் செய்து மீனா வற்புறுத்தியதையும், கொலுக்கு வலுகட்டாயமாக அழைத்ததையும் கூறுகிறார். இதனை அறிந்துக்கொண்ட ரோகிணி காயை நகர்த்தத் தயாராகிறார். ரோகிணி, பாட்டியிடம் மீனா மற்றும் முத்து சொன்னபடி அவர்களுடன் கிளம்பி வீட்டுக்கு வா, வந்ததும் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவர்களை அவமானப்படுத்தி பேசும் விதமாக பேசிவிட்டு சண்டை போட்டு இனி க்ரிஷ் பக்கத்தில் அவர்கள் வராதபடி அசிங்கப்படுத்திவிட்டு பேசிரு என்று தனது ப்ளானை சொல்கிறார்.
இதனையடுத்து கொலுக்கு வந்த க்ரிஷை மடியில் வைத்து மீனாவும் முத்துவும் தங்களது பிள்ளை போல் கொஞ்சி பேசுகின்றனர், இதைப் பார்த்தா மீனா தனது அம்மாவுக்கு சிக்னல் கொடுக்கிறார். உடனே அவர் என் பிள்ளைக்கு நான் இருக்கிறேன் அவனுடைய அம்மா இருக்கிறார். எதற்கெடுத்தாலும் தத்தெடுக்கிறேன் என்று அனாதை பிள்ளை மாதிரி பேச வேண்டாம். இனி எங்க விஷயத்துல தலையிட வேண்டாம் ரொம்ப ஓவராக போறீங்க என்று வாய்க்கு வந்தப்படி திட்டிவிட்டு க்ரிஷை கூட்டிட்டு போய் விட்டார்.
இதனையடுத்து இருவரும் அவமானப்படுத்தப்பட்டதால் தலைகுனிந்து நிற்கின்றனர். மாடிக்கு சென்று மீனா மிகவும் அழுகிறார். முத்து எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அழுதுகொண்டே இருக்கிறார். இதனையடுத்து ரோகிணி ஜாடை மாடையாக பேசி மேலும் மீனாவை காயப்படுத்துகிறார்.
ரோகிணி விஜயா வீட்டுக்கு சென்றார். அங்கு க்ரிஷ் பாட்டி மீனாவை காயப்படுத்தியதை சொல்லி மிகவும் கவலைக் கொள்கிறார். அதற்கு ரோகிணி அதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று சொல்லி சமாதானப்படுத்துகிறார்.
இதனை அடுத்து முத்து, மீனாவை கூட்டிட்டு அவருடைய அம்மா வீட்டுக்கு போகிறார். போனதும் நடந்த விஷயத்தை சொல்லி ஃபீல் பண்ணுகிறார். அத்துடன் அங்கே வந்த சத்யா அழுது கொண்டே என்னால் இனி காலேஜில் எக்ஸாம் எழுத முடியாது என்று சொல்கிறார்.
ஏன் என்று கேட்கும்போது தான் சரியாக காலேஜ் போகாததால் எக்ஸாம் எழுத முடியாது என்று சொல்கிறார். இதைப் பார்த்த முத்து சத்யாவுக்கு ஆறுதல் சொல்கிறார். நீ நிச்சயம் எக்ஸாம் எழுதுவ அதற்கு நான் பொறுப்பு என்று சொல்கிறார். சத்யா மற்றும் முத்துவின் பாசத்தை பார்த்த மீனா ஆனந்த கண்ணீர் வடித்து விட்டார்.
இதற்கிடையே ரோகிணியின் அடுத்த வேலை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.