கதைகளை எங்கிருந்து எடுக்கலாம் – பாக்யராஜ் ஓபன் டாக்!

Bhagyaraj
Bhagyaraj
Published on

3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் ‘ஆலன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டுள்ளார்.

வெற்றி நடித்திருக்கும் ஆலன் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கே.பாக்யராஜ் பேசுகையில், “சிறிய முதலீட்டு திரைப்படங்களை திரையரங்கத்திற்கு கொண்டு வருவதில் பெரு முயற்சி செய்து வருபவர் தனஞ்செயன். அவர் இந்தப் படத்திலும் இணைந்திருப்பதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றி எப்போதும் வித்தியாசமான படங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பார். எல்லா படங்களுக்கும் ஒப்புக்கொள்பவர் அவர் இல்லை. அவர் படங்கள் என்றாலே ரசிகர்கள் ஒரு வித்தியாசமான கதைக்களத்தையே எதிர்பார்ப்பர். இந்தப் படத்தை தேர்வு செய்து நடித்ததற்காக நடிகர் வெற்றிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்த வெற்றிப் பயணத்தை மாற்றிக் கொள்ளாமல்… புதிய முயற்சிக்கு மேற்கொள்ளுங்கள். இதுவும் காதல் கதை தான். ஆனால் இதிலும் கமர்ஷியல் கலந்திருக்கிறது.  

தயாரிப்பாளரும், இயக்குநருமான சிவாவிற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். பேரும் புகழையும் தாண்டி சினிமாவில் மூன்றாவது ஒன்று இருக்கிறது என்பதை எனக்கு புரியவைத்தார்.  சமூக சேவைக்காக சினிமாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றதும் அவர் மீது எனக்கு மரியாதை வந்தது.

சிங்கப்பூரில் வேலை செய்த அவருக்கு அங்கு எழுத்தாளர்களை எவ்வளவு மதிக்கிறார்கள் என்றும், ஏன் இங்கு அந்தளவு அவர்களுக்கு மதிப்பு கிடைப்பதில்லை என்றும் யோசனை வந்திருக்கிறது. அந்த ஆதங்கத்தின் காரணமாகவே இந்த படத்தின் நாயகன் வெற்றியை ஒரு எழுத்தாளராக நடிக்க வைத்திருக்கிறார்.

 நாம் வாழ்க்கையை பார்ப்பதும், புத்தகங்களைப் படிப்பதும் ஒன்றுதான். ஏனெனில், ஒருவன் தன் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருக்க முடியாது. ஆனால் புத்தகங்களை படிக்கும் போது தான் அந்த கதாசிரியர் .. அவருடைய வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை கதாபாத்திரங்களாக உருவாக்கி இருப்பார். நான் என் வாழ்க்கையில் காண்டேகர் கதைகள் ,ஜெயகாந்தன் கதைகள், கல்கியின் கதைகள் ஆகியவற்றை படித்திருக்கிறேன். இது போன்ற ஏராளமான புத்தகங்களை படிக்கும் போது புதிய புதிய கதாபாத்திரங்கள் கிடைக்கும். இதன்முலமே கதைகளை எடுக்கமுடியும்.

இதையும் படியுங்கள்:
திரைத்துறையில் ஒரு மாபெரும் கவிஞனின் பங்கு!
Bhagyaraj

கடைசி வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு அன்பின் வலிமை புரிய வேண்டும் என இயக்குநர் சிவா விரும்பி இருக்கிறார். தூய்மையான ஆன்மீகம் என்பது அன்பு என்பதையும் சொல்லி இருக்கிறார். எனவே சிவாவின் ஆலன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்”  என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com