சிறகடிக்க ஆசை: திடீரென மாயமான மீனா; பழிவாங்க கடத்தினாரா சிந்தாமணி?

விஜய் டிவியின் டாப் சீரியலில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிரடி திருப்பங்கள்; சத்யா-ரேகா காதலால் வந்த புதிய வினை.
Siragadikka aasai
Siragadikka aasai
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் குடும்ப உறவுகள், கணவன் மனைவி இடையே உள்ள பாசம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எளிமையான ஆனால் நேர்மையான ஆட்டோ ஓட்டுநராக முத்து மற்றும் பொறுப்பான, குடும்பத்தை அனுசரித்துச் செல்லும் மீனா ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி கதை நகர்கிறது. குடும்பத்தில் ஏற்படும் சவால்களை மீனா எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மிக சுவாரசியமாக கூறுகிறது இந்த சிறகடிக்க ஆசை சீரியல். விஜய் டிவியின் டாப் சீரியலில் ஒன்றாக டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ளது இத் தொடர்.

இத்தனை நாளா வீட்டு பிரச்சனையை ஓட்டி வந்த சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. அதுதான் காதல் பிரச்சினை. சத்யா-ரேகா இருவரும் ஒன்று சேரக்கூடாது என்று சிந்தாமணி என்னென்னமோ செய்கிறார். ஆனால் முத்து சாமர்த்தியமாக சிந்தாமணியால் கண்டுபிடிக்க முடியாத வகையில் சத்யா, ரேகா இருவரையும் தன்னுடைய பாட்டி வீட்டில் பாதுகாப்பாக இருக்க வைத்து விடுகிறார்.

விஜயா மனோஜ் இருவரும் வக்கீலை பார்க்கச் சென்று அங்கு ரோகினி 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் விவாகரத்து தருகிறேன் என்று சொன்னதைச் சொல்ல, வக்கீலோ ரோகினி அப்படிப்பட்ட ஆள் இல்லையே அவள் எப்படி விவாகரத்துக்கு ஒப்புக் கொள்வாள் என்று சந்தேகப்பட்டு ரோகினிக்கு போன் போட்டு கேட்க, அவரும் தனக்கு ஒரே செட்டில்மெண்டாக 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போடுவதாக கூறுகிறார். அத்துடன் போனிலேயே விஜயாவை மிகவும் மோசமாக திட்டியும் விடுகிறாள்.

அடுத்து நள்ளிரவில் மீனாவின் அம்மா சந்திரா மீனாவிற்கு போன் செய்து தன் வீட்டின் கீழே யாரோ இரண்டு நபர்கள் தொடர்ந்து நின்று கொண்டிருப்பதாகவும், தன்னை அவர்கள் தொடர்ந்து  கண்காணிப்பதாகவும், எங்கு சென்றாலும் பின்னாடியே வருவதாகவும், பயமாக உள்ளது என்றும் சொல்ல அதிர்ச்சி அடைந்த மீனா 'கவலைப்பட வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லி முத்துவிடம் இது தொடர்பாக பேசி ஒரு முடிவுக்கு வருகிறாள். அம்மாவை பார்வதி ஆன்ட்டி வீட்டில் தங்க வைக்க பிளான் போடுகிறார் மீனா. இதைப் பற்றி பேசுவதற்காக மறுநாள் காலையிலேயே பார்வதி வீட்டிற்குச் சென்று இந்த விஷயத்தைப் பற்றி தயங்கி தயங்கி பேச பார்வதியோ இதற்கு எதற்கு இவ்வளவு தயக்கம் உன் தம்பிக்கும் ரேகாவுக்கும் கல்யாணம் முடியும் வரை உன்னுடைய அம்மா என் கூடவே இருக்கட்டும். நீ போய் உங்க அம்மாவை அழைத்துக் கொண்டு வா என்று சொல்ல சந்தோஷத்துடன் கிளம்பி விடுகிறாள் மீனா.

Siragadikka aasai heroine
Siragadikka aasai heroine

மீனாவுக்கு முத்து போன் போட போன் போகாமல் சுவிட்ச் ஆஃப் என்று வருகிறது. அதே போல் அண்ணாமலையும் மீனாவுக்குவுக்கு போன் போட்டதாகவும் ஆனால் அவள் எடுக்கவில்லை என்றும் கூற முத்து பார்வதி, மீனாவின் அம்மா சந்திரா எல்லோருக்கும் போன் போட்டு விசாரிக்க எங்குமே இல்லை என்ற பதில் கிடைக்கிறது. அடுத்து பூ வியாபாரம் செய்யும் அவளுடைய தோழிகள் இருக்கும் பூக்கடை, சங்கம் என பல இடங்களில் மீனாவைத் தேடி விசாரிக்க அனைவரும் மீனா இங்கு வரவில்லை என்று சொல்கின்றனர்.  மீனாவைக் காணாமல் முத்து பயம் கொள்கிறார். ஒருவேளை சிந்தாமணியின் வேலையாக இருக்குமோ என்று பதற்றம் அடைந்து மீனாவைத் தேடி தெருத்தெருவாக அலைகிறார்; ஆனால் எங்குமே அவள் இல்லை. ஒருவேளை சிந்தாமணி தான் கடத்தியிருப்பாளோ? தன் மகளை தன்னிடம் ஒப்படைப்பது விட வேண்டும் என்ற நிபந்தனை வைத்து கடத்தி இருப்பாளோ? முத்து அவரை கண்டுபிடிப்பாரா இல்லையா? 

கடத்தப்பட்ட ரேகாவை முத்துவும்  மீனாவும் மாறுவேடத்தில் சென்று மீட்டதால், அதற்குப் பழிவாங்க ரேகாவின் பெற்றோர் மற்றும் சிந்தாமணி தரப்பு திட்டமிட்டு மீனாவை கடத்தி இருக்கலாம். விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்தத் தொடரில் முத்து மீனாவை எப்படி கண்டுபிடிக்க போகிறார்? அடுத்து என்ன நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!

logo
Kalki Online
kalkionline.com