விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் விஜயாவும் மீனாவும் எவ்வளவோ தடுத்தும் வீட்டைவிட்டு வெளியேறுகிறார் ஸ்ருதி.
முத்துவும் மீனாவும் எப்படியாவது சத்யாவை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று கல்லூரிக்கு செல்கிறார்கள். ஆனால், பிரின்ஸிப்பலை பார்க்க முடியாது என்று கூறிவிடுகிறார்கள். உடனே முத்து குடித்து மீனாவை அடிப்பதுபோல் நடிக்கிறார். பிரின்ஸிப்பல் வந்து அந்த நாடகத்தை உண்மை என்று நம்பி, சத்யா வீட்டில் சரியான சூழல் இல்லை என்று முடிவு செய்து சத்யாவை மீண்டும் கல்லூரியில் சேர்க்கிறார்.
ஆனால், முத்து இப்படி குடித்துவிட்டு மனைவியை அடிக்கிறார் என்று போலீஸில் புகார் அளிக்கின்றனர். உடனே போலீஸ் அவரை அரஸ்ட் செய்கின்றனர். மீனா இது ஒரு நாடகம் என்று எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேட்கவில்லை. நேற்று எபிசோட்டில், முத்துவை எப்படியாவது வெளியே கொண்டு வர வேண்டும் என்று மீனா எல்லோருக்கும் போன் செய்து பேசி இருந்தார். அப்போது ஸ்ருதிக்கு போன் செய்து நடந்தவற்றை சொல்லி மீனா உதவி கேட்டார். ஸ்ருதி தன்னுடைய அப்பாவிடம் உதவி கேட்க, அவர் முடியாது என்று மறுத்து விட்டார்.
உதவி எதுவும் கிடைக்காமல் மீனா விட்டிற்கு திரும்புகிறார். வீட்டில் அனைவரும் மீனாவை டார்கெட் செய்து பேசுகின்றனர். அண்ணாமலையும் நீங்கள் நல்லதுக்கே செய்தாலும் ஒரு வார்த்தை என்னிடம் கூறியிருக்கலாம் என்று பேசுகிறார். இவையனைத்தையும் பார்த்து விஜயா மிகவும் சந்தோஷப்படுகிறார். அடுத்தநாள் முத்து எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்லி அவரை விடுவிக்கின்றனர்.
இதனையடுத்து இன்று முத்துவை மீனா வீட்டிற்கு அழைத்து வருகிறார். அப்போது விஜயா ஓவராக பேசுகிறார். அண்ணாமலை அமைதியாக இருக்கிறார். இதனால் முத்து விஜயா இடையே வாக்குவாதம் நடக்கிறது. பிறகு அண்ணாமலை இனி இதுபோல செய்யாதீர்கள் என்று கூறிவிட்டு செல்கிறார்.
அதேபோல் ஸ்ருதிக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. அதனால் ரவியை லீவ் போட சொல்கிறார். ஆனால், ரவியின் ஓனர் வந்தே தீர வேண்டும் என்று கூறிவிடுவதால், வேறு வழியில்லாமல் ரவி வேலைக்கு செல்கிறார். இதனால், கோபத்தில் ஸ்ருதி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
மீனா எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறார். ஆனால் கேட்கவில்லை. விஜயாவும் ஸ்ருதியை சமாதானம் செய்கிறார். ஆனால், அப்போதும் கேட்காமல் ஸ்ருதி வீட்டை விட்டு வெளியேறுகிறார். உடனே விஜயா ரவிக்கு போன் செய்து நடந்ததை சொல்லி, நீ அவளை கூப்பிட போகாதே. அவளாக வரட்டும். திமிர் பிடித்தவள் உன் பேச்சைக் கேட்க வேண்டும் என்றெல்லாம் தேவையில்லாததை சொல்லித் தருகிறார். ஆனால், ரவி அமைதியாகவே இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.