ரோகினி - கிரிஷ் உறவு குறித்து வெளிவருமா உண்மை? அடுத்து என்ன நடக்கும்? அனல் பறக்கும் சிறகடிக்க ஆசை புரோமோ!

Siragadikka Aasai
Siragadikka Aasai

விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னனி இடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்பான கதை களத்தை எட்டியுள்ளது.

வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. வீட்டின் இரண்டு மருமகள்களும் பணக்கார பெண்கள் என்பதாலும், வேலைக்கு செல்வதாலும் மீனாவை அதிகமாக வேலை வாங்குகிறார் விஜயா. இதனால் முத்து, மீனாவிற்கு பூக்கடை திறந்து கொடுக்கிறார். இது நல்ல முறையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது புது ட்விஸ்ட் பிறந்துள்ளது.

சீரியலில் ஏமாற்றி சென்ற ஜீவா இந்தியாவிற்கு வந்தவுடன் மனோஜிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார். ஒரு வழியாக ஜீவாவிடம் இருந்து மனோஜ் பணத்தை வாங்கி கொள்கிறார். மனோஜ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை தன்னுடைய அப்பா தான் போட்டார் என்று ரோகினி மாற்றி சொல்லி விடுகிறார். கடந்த வாரம் மனோஜ் பர்னிச்சர் கடைக்கு ஓனர் ஆகிறார். பின் வீட்டில் ரூம் ப்ரச்சனை வருகிறது. இதனால் ஒரு ஜோடி ஒரு வாரம் வெளியில் படுக்க வேண்டும். மற்ற ஜோடி உள்ளே படுக்க வேண்டும் என்று பாட்டி சொல்கிறார். இருந்தும் ரூம் பஞ்சாயத்து பெருசாகிறது.

இதற்கு அண்ணாமலை முடிவு கட்ட நினைக்கிறார். இன்னொரு பக்கம் கடையில் சுருதி அம்மா, தான் வாங்கிய பொருளை திருப்பி தந்ததால் ரோகினி தன்னுடைய தாலிக் கொடியை அடமானம் வைத்து பணம் கொடுக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் வீட்டில் பயங்கரமாக முத்துவிடம் சண்டை போட்டார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் ரோகினியின் மகன் கிரஷுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் இருக்கிறார்.

இது ரோகினிக்கு தெரிந்தவுடன் அவர் பதறிப்போய் ஹாஸ்பிடல் செல்கிறார். அந்த சமயம் பார்த்து ஹாஸ்பிடலுக்கு வந்த முத்து- மீனா அவர்களை சந்தித்து நடந்ததை தெரிந்து கொள்கிறார்கள். பிறகு அவர்கள் தங்களுடைய வீட்டிற்கு கிருசை அழைத்து வந்து விடுகிறார்கள். வழக்கம்போல் விஜயா வீட்டில் இருக்கக் கூடாது என்று திட்டுகிறார். நேற்றைய எபிசோடில் மீனா, கிருஷுக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்கிறார். இதை பார்த்து ரோகினி கோபம் அடைந்து கிருஷ்-மீனாவை பிரிக்க வேண்டும் என்ற திட்டம் போட்டு குடும்பத்தில் உள்ள எல்லோரையும் வெளியே அனுப்பி விடுகிறார்.

இதையும் படியுங்கள்:
பிரேம்ஜி திருமணம்... இது மட்டும் தான் உண்மை... வெங்கட்பிரபு பளீச்!
Siragadikka Aasai

பின் ரோகினி, தன்னுடைய அம்மாவிடம் எதற்கு இங்கே வந்தாய்? என்று கேட்கிறார். அவர், உன் மகன் தான், நிலைமையை புரிந்து கொள் என்று அழுகிறார். உடனே ரோகினி, நான் தான் கிருஷ் அம்மா என்று சொல்வதை க்ரிஷ் ஓரமாக நின்று கேட்டு, அத்தை நீதான் என்னுடைய அம்மாவா! ஏன் சொல்லவில்லை? என்று கேட்கிறார். உடனே ரோகினி, கிருஷை கட்டிப்பிடித்து அழுகிறார். ஒரு வழியாக கிருஷுக்கு தன் தாய் யார் என்பது தெரிந்து விட்டது. ரோகினி தோழி வீட்டில் இருக்கும் மீனா, பூ கட்ட சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த சமயம் பார்த்து ரோகினியின் மாமாவாக நடிக்க வந்தவர் வருகிறார். எப்படியோ சமாளித்து ரோகினியின் தோழி அவரை அங்கிருந்து அனுப்பி விடுகிறார்.

வீட்டில் இருந்து தன்னுடைய அம்மாவை வெளியே அனுப்ப ரோகினி பல திட்டம் போடுகிறார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஒரு வழியாக முத்து- மீனா வந்து விடுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், கிரிஷ் கண்ணை திறக்கும் போது முதன் முதலாக தன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ரோகினியும் தன் மகனை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வருகிறார். கிரிஷ் ரோகினியை பார்த்து கட்டி அனைத்து முத்தம் கொடுக்கிறார். அந்த சமயம் பார்த்து முத்து- மீனா ஹாஸ்பிடலுக்கு வருகிறார்கள். அவர்கள் ரோகினியை பார்த்து அதிர்ச்சி ஆகிறார்கள். இதனால் இனி ரோகினி - கிரிஷ் உறவு குறித்த உண்மை வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த புரோமோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com