பிரேம்ஜி திருமணம்... இது மட்டும் தான் உண்மை... வெங்கட்பிரபு பளீச்!

Premji - Venkat Prabhu
Premji - Venkat Prabhu

இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் குறித்து பரவி வந்த வதந்திக்கு, அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி, சிம்பு இயக்கி, நடித்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்து பிரபலமானார். தொடர்ந்து சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து அசத்தியிருப்பார். பல படங்களில் நடித்திருந்தாலும் தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படங்களே இவருக்கு அதிக பெயர் பெற்று தந்தது.

அதாவது வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்கள் பிரேம்ஜிக்கு மிகவும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் தனது சகோதரர் இயக்கும் படத்தில் மட்டுமே அதிகளவு நடித்துவருகிறார். தற்போத் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படமான கோட் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்திலும் நடித்து அசத்தியிருப்பார்.

என்னதான் அடுத்தடுத்து சினிமா வாழ்க்கை களைகட்டி வந்தாலும், குடும்ப வாழ்க்கையை மலராமலேயே வைத்திருந்தார். ஆனால் தற்போது திருமண பத்திரிகையை வெளியிட்டு திருமண தேதியை சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார். திருத்தணி முருகன் கோயிலில் வரும் ஜூன் மாதம் 9ம் தேதி காலை 9 மணி முதல் 10,30 மணிக்குள் இந்த திருமணம் நடக்கவுள்ளதாகவும் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
தேர்தலில் வெற்றி... வாழ்த்து கூறிய விஜய்... யாருக்கு தெரியுமா?
Premji - Venkat Prabhu

இதை தொடர்ந்து நெட்டிசன்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் பலர் பிரேம்ஜி திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் யார்? என தேட துவங்கிய நிலையில், சிலர் அவர் மீடியாவை சேர்ந்த பெண் என கூறி வதந்திகளை பரப்பினர்.இது போன்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும், எனக்கும், ஆதரவையும்.. அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.

எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. பாகுபலி கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பன சுந்தரியை இப்போ யாரு வச்சிருக்கா? இது எல்லாவற்றையும் விட பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ என்ற உங்கள் கேள்விக்கு பதில் வரும் 9-ஆம் தேதி கிடைத்துவிடும். சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருகிய நண்பர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவினர்களுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்.

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண பத்திரிகையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விட்டார். எப்படி கல்யாண பத்திரிக்கை வைரலானதோ அதேபோல் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என்று கூறி புகைப்படங்கள் உலா வருகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களை பகிர்வேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி, அதையும் வைரலாகுமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம். தி கோட் அப்டேட் விரைவில் என குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com