புது லுக்கில் சிவாங்கி... குவியும் லைக்ஸ்!

Sivaangi Krishnakumar
Sivaangi Krishnakumar

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக வந்தவர் தான் சிவாங்கி. தனது பாடல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் ஃபேமஸானார். ஏற்கனவே இவர் ஒரு யூடியூப் பிரபலமாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறியப்பட்டார்.

இவரின் பெற்றோர்களும் பிரபல பாடகர் என்பதால், இசை துறையில் கொடி கட்டி பறந்தார். ஆனாலும் பெரிதளவு பேமஸ் ஆகாத இவருக்கு குக்வித் கோமாளி நிகழ்ச்சி தான் ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது என்று சொல்லலாம்.

உலகளவில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் குக்வித் கோமாளியும் ஒன்று. இந்த ஷோவில் கோமாளியாக பங்கேற்ற இவர், மற்ற கோமாளிகளுடன் சேர்ந்து போட்ட லூட்டியால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதுவும் குறிப்பாக 2வது சீசனில் அனைவரும் ஒரு குடும்பமாக வாழ்ந்ததன் மூலம் மக்களை கவர்ந்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்:
விரைவில்... 'குக்வித் கோமாளி 5' போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!
Sivaangi Krishnakumar

இந்த நிகழ்ச்சி மூலம் தான் அனைவருக்கும் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. புகழ், பாலா, குரோஷி என அனைவருக்கும் வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது இந்த நிகழ்ச்சி தான். அப்படி கோமாளியாக கலக்கி வந்த இவர், கடந்த சீசனில் குக்காக எண்ட்ரி கொடுத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். சமையலில் அனைவருக்கும் டஃப் கொடுத்து ஃபைனல்ஸ் வரை முன்னேறினார். இப்படி பல இடங்களில் பெயர் பெற்ற இவர் தற்போது ஹேர் ஸ்டைலை மாற்றி புது லுக்கில் காட்சியளிக்கிறார்.

இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிவாங்கியின் சம்மர் 2024 புது லுக் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு லைக்ஸ்களை அள்ளி தட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com