விரைவில்... 'குக்வித் கோமாளி 5' போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

Cooku with Comali Season 5
Cooku with Comali Season 5

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளதாக, ப்ரோமோ வெளியிட்டு விஜய் டிவி உறுதி செய்துள்ள நிலையில், தற்போது போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கும் உலகம் முழுவதும் ஆதரவு உள்ளது. குக்கிங் ஷோவை அழகாக எடுத்து செல்லும் இந்த நிகழ்ச்சியின் கோமாளிகளுக்கு அதிக ரசிகர்கள் உண்டு.

இந்த நிகழ்ச்சி மூலம் தான் நிறைய கோமாளிகளுக்கு பல வாய்ப்புகள் வீடு தேடி வந்தது. அந்த அளவிற்கு ரசிகர்கள் ஆதரவு இந்த நிகழ்ச்சிக்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் குக் வித் கோமாளியின் 5வது சீசன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லை என்று சொல்லி வந்த நிலையில், விஜய் டிவி புதிய புரோமோவை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது. இந்த ஷோவில் இருந்து வெங்கடேஷ் பட் வெளியாகிய நிலையில், செஃப் தாமுவுடன் மற்றொரு செஃப் இணைந்துள்ளதை அதில் கூறினர். இந்த நிலையில் போட்டியாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
மலையாள சினிமாவில் புதிய சாதனை படைத்த 'மஞ்சுமல் பாய்ஸ்'..!
Cooku with Comali Season 5

அந்த வகையில்.. ஏற்கனவே, நடிகை வடிவுக்கரசி, டப்பிங் ஆர்டிஸ்ட் தீபா வெங்கட், நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி, பிக்பாஸ் சீசன் 7 பைனலிஸ்ட்டான விஷ்ணு விஜய், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகள் அக்‌ஷதா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை ஹேமா, ஆகியோர் இந்த சீசனில் போட்டியாளர்களாக களமிறக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, பிரபல youtuber மற்றும் ஹோட்டல் ரிவியுவரான இர்பான், நடிகர் விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகை திவ்யா துரைசாமி ஆகியோர் வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com