
Sleep 2023 ல் ரிலீஸ் ஆன கொரியன் திரைப்படம். இந்த படத்தை இயக்கியவர் டைரக்டர் Jason yu. இந்த படத்தில் Jung yu-mi, Lee-sun-kyun போன்ற பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் 11.1 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sleep - இந்த படம் உங்களை நிம்மதியாக தூங்க விடாது என்று சொன்னால் மிகையாகாது. அப்படி இந்த கதையில் என்ன தான் இருக்குன்னு பாரத்தால்...
புதிதாக திருமணம் ஆன ஹீரோ, ஹீரோயின் இருவரும் ஒரு அப்பார்ட்மெண்ட்ல் குடியிருப்பார்கள். ஹீரோயின் கர்ப்பமாக இருப்பார். இவர்கள் இருவர் வாழ்க்கையிலும் எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டிருக்கும்.
ஒருநாள் ஹீரோயினுக்கு தன்னுடைய கணவனுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியிருப்பது தெரிய வரும். அவன் தூக்கத்தில் நடந்தால் பரவாயில்லை. ஆனால், இரவு ஆனாலே ஹீரோ மிகவும் வித்தியாசமாக நடந்துக் கொள்வான். காலையில் இரவு நடந்ததை சொல்லிக் கேட்டால், அவனுக்கு நடந்த எதுவுமே நினைவில் இருக்காது.
இதற்கு நடுவிலே ஹீரோயினுக்கு குழந்தை பிறக்கும். இப்போது அந்த பிறந்த குழந்தையை வைத்துக்கொண்டு, 'தூக்கத்தில் தான் என்ன செய்கிறோம்' என்பதே தெரியாத ஹீரோவையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ஹீரோயின் ரொம்ப கஷ்டப்படுவாள். ஒரு கட்டத்தில் ஹீரோயின் செய்வதெல்லாம் சைக்கோத்தனமாக மாறிவிடும்.
இந்த படத்தை பார்க்கும் நமக்கு யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்பதிலே குழப்பம் வந்துவிடும். ஹீரோயின் சொல்வது உண்மையா அல்லது ஹீரோ சொல்வது உண்மையா? இந்தப் படத்தில் பேய் இருக்கா இல்லையா? இதையெல்லாம் கடைசி 2 நிமிஷத்தில் சிறப்பான பிளாட் ட்விஸ்டுடன் கூறியிருப்பார்கள்.
படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை நமக்கு புரியாத சில சீன்களுக்கு கடைசியில் விளக்கம் கிடைக்கும். இந்த படம் எனக்கு பிடித்ததற்கான ஒரே காரணம், கடைசி வரைக்கும் மண்டையை போட்டு குழப்பி எடுத்திருப்பார்கள். அவ்வளவு தான் படம் முடிய போகுதுன்னு நாம நினைக்குற கடைசி நிமிடத்தில் வைத்திருக்கும் டிவிஸ்ட் உண்மையிலேயே இந்த படத்தில் என்ன நடக்கிறது என்பதை புரிய வைத்திருக்கும். அதுவே இந்த படத்தின் பிளஸ் ஆகும்.
Sleep கண்டிப்பாக ஹாரர் பட ரசிகர்கள் தவறவிடக் கூடாத சிறந்த படமாகும். இந்த படத்தை Netflix, Hulu போன்ற OTT தளங்களில் பார்க்க முடியும். எனவே, நீங்களும் இந்த வித்தியாசமான படத்தை பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று உங்கள் கருத்தை மறக்காமல் சொல்லுங்க.