
தற்போது உள்ள காலக்கட்டத்தில் நிறைய பேருக்கு நடக்க முடியாதப்படி கால் வலி, கால் நரம்பு சுண்டியிழுப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது சகஜமான ஒன்றாகி விட்டது. இதுப்போன்ற பிரச்னைகளை Sciatica என்று சொல்கிறோம். இந்த பிரச்னையால் அதிகம் அவதிப்படுவது பெண்கள் தான்.
இந்த பிரச்னையை தான் Sciatica nerve pain என்று கூறுகிறார்கள். Sciatica என்பது உடலில் பின்பகுதியில் இருந்து கணுக்கால் வரைக்கு அமைந்திருக்கும் ஒரு முக்கியமான நரம்பாகும். மூளையிலிருந்து கால்களுக்கு தேவையான அனைத்து முக்கியமான தகவல்களை கடத்தக் கூடிய நரம்பு தான் Sciatic நரம்பு.
கால்களை பயன்படுத்தி செய்யக்கூடிய அனைத்து வேலைகளுக்கு உதவியாக இருக்கக் கூடியது இந்த நரம்பு. அத்தகைய நரம்பில் பிரச்னையோ அல்லது, அது பலவீனம் அடைந்தாலோ தான் Sciatic nerve pain ஏற்படுகிறது. இந்த பிரச்னை குணமாவதற்கான 5 வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
1. Ginger oil.
இஞ்சி எண்ணை நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இது Anti inflammatory பண்புகளைக் கொண்டது. கடுமையான வலியைக் கூட குறைக்கக் கூடியது. இந்த எண்ணெய்யை 5 துளிகள் கால்களில் விட்டு நன்றாக மசாஜ் செய்தாலே வலிகள் குறையும்.
2. Hot water massage.
மிதமான சூட்டில் இருக்கும் நீரில் காட்டன் டவலை பயன்படுத்தி கால்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக கால்களில் உள்ள நரம்புகளில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் நரம்புகளில் உள்ள Inflammation விரைவில் சரியாகவும் உதவும்.
3. Epsom salt.
Epsom salt நாட்டு மருந்து கடைகளிலே கிடைக்கும். இதில் இயற்கையாகவே மெக்னீசியம் இருக்கிறது. இது வலிக்கு நல்ல நிவாரணமாக இருக்கும். மிதமான சுடுத்தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி Epsom saltஐ சேர்த்து அதை தொடையில் இருந்து கால் வரை ஊற்றிக் கொண்டு வந்தால் வலியிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
4. Garlic milk.
பூண்டு பால் Sciatica பிரச்னைக்கு அற்புதமான தீர்வுக் கொடுக்கக் கூடியது. பூண்டு இயற்கையாகவே Anti inflammatory பண்புகளைக் கொண்டது. இது நரம்பில் உள்ள ரத்த கட்டுக்களைக் குறைத்து நரம்புகளுக்கு வலுக்கொடுக்கக் கூடியது. ரத்த ஓட்டம் சீராக இயங்கவும் உதவியாக இருக்கும்.
5.Vitamin B12 and vitamin D foods.
வைட்டமின் B12 அசைவ உணவுகளில் அதிகம் உள்ளது. மீன், முட்டை, இறைச்சி போன்றவற்றில் அதிகமாக உள்ளது. சோயா பாலில் அதிகமாக வைட்டமின் B12 உள்ளது. பால் சார்ந்த பொருட்களான பால், தயிர், சீஸ் போன்றவற்றில் உள்ளது. வைட்டமின் டி சூரிய ஒளியில் இருந்து நமக்கு கிடைக்கிறது. தினமும் அரை மணி நேரம் சூரிய ஒளியில் இருப்பது அவசியமாகும்.
இந்த டிப்ஸை எல்லாம் பின்பற்றி Sciatica nerve problemல் இருந்து குணமாகி ஆரோக்கியமாக வாழுங்கள்.
முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு தகுந்த மருத்துவரை அணுகவும்.