பிக்பாஸ் சீசன் 8ல் ஐஸ் காபி பற்றிப் பேசிக்கொண்டிருந்த மஞ்சரியை கிண்டல் செய்திருக்கிறார் சவுந்தர்யா. இதற்கு விஜய் சேதுபதி சவுந்தர்யாவை கண்டிப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போ இரண்டு வீடுகளும் இணைக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா, சிவா மற்றும் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டனர்.
இதுவரை மஞ்சரியை பார்த்தாலே ரசிகர்களுக்கு பிடிக்காமல் இருந்தது. அவர் கண்டன்டுக்காக வேண்டுமென்றே சண்டைப் போடுகிறார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், வார இறுதியில் விஜய் சேதுபதியின் செயலால் மஞ்சரி மேல் ரசிகர்களுக்கு ஒரு நல்ல எண்ணம் தோன்றியிருக்கிறது. அவர் பாவம் என்று பதிவிட்டு வருகின்றனர்.
அருண் மஞ்சரி சண்டையில், மஞ்சரி செய்தது தவறு என்று விஜய் சேதுபதி கடுமையாக பேசி மன்னிப்பு கேட்க வைத்தார். இது ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை. ஏனெனில் ட்ரிகரிங் போன்ற வார்த்தைகளை முதலில் அருண்தான் பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் மஞ்சரி பேசியபோது அவரை கிண்டல் செய்வது போன்று சவுண்டு கொடுத்ததுடன், நாய் போன்று குரைத்தார் சவுந்தர்யா. அதை கேட்டு ரயான் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தார். இப்படி பண்ணாத சவுந்தர்யானு ஜாக்குலின் சொல்லியும் அவர் கேட்கவில்லை. சவுந்தர்யாவின் இந்த செயல் தான் அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது.
இதனால், ரசிகர்கள் மஞ்சரி பிக்பாஸிற்கு வந்திருக்க கூடாது. அவள் மேல் தவறோ இல்லையோ… ஆனால், இப்படி கிண்டல் செய்வது மிகவும் தவறு… இதையாச்சும் விஜய் சேதுபதி கேட்பாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.