கட்டாய திருமணத்தில் இருந்து ஆனந்தியை கயல் காப்பாற்றுவாளா? அடுத்தடுத்த பரபரப்பான திருப்பங்கள்!

சன் டிவி கயல் சீரியல்: டிஆர்பி-யில் முதலிடம் பிடிக்கும் விறுவிறுப்பான திருப்புமுனைகள்!
கயல் சீரியல்
கயல் சீரியல்Img Credit: SunNxt
Updated on

சின்னத்திரையில் விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் தான் அதிகமாக சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. அதிலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் அதன் விறுவிறுப்பான கதைகளத்தால் டிஆர்பி தரவரிசையில் முன்னணியில் இடம் பிடிப்பதுடன் மக்களால் மிகவும் கொண்டாடப்பட்டும் வருகிறது.

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இத்தொடர், குடும்பத்தின் ஒற்றை வருமான ஆதாரமாக இருக்கும் ஒரு கஷ்டப்படும் பெண்ணின் சுயநலமற்ற வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது. தந்தையால் கைவிடப்பட்டு, குடிப்பழக்கத்திற்கு அடிமையான, பொறுப்பற்ற சகோதரனால் ஏற்படும் கடன்களை அடைத்து குடும்பத்தைக் காக்கும் துணிச்சலான நாயகி. குடும்பச் சுமையைத் தன் தோளில் சுமக்கும் ஒரு நர்ஸ்(செவிலியர்) தான் கதைக்களம். இது திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மாலை 7.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இத்தொடரின் இயக்குனர் பி. செல்வம். சின்னத்திரையின் முன்னணி நடிகையான சைத்ரா ரெட்டி கயல் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து வருகிறார். கயலுக்கு ஜோடியாக எழில் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சஞ்சீவ் கார்த்திக்கும், முக்கிய எதிர்மறை கதாபாத்திரத்தில் 'வழக்கு எண்' முத்துராமனும் நடித்து வருகின்றனர்.

தனது அண்ணன், தம்பி (அன்பு) மற்றும் தங்கைகள் (தேவி, ஆனந்தி) ஆகியோரின் தேவைகளையும் கனவுகளையும் நிறைவேற்ற தன் வாழ்க்கையையே தியாகம் செய்யும் ஒரு பெண்ணின் போராட்டமே இதன் முக்கிய கதையாகும். இத்தொடரின் ஆரம்பகால மையக்கருத்து, புகழ்பெற்ற இயக்குனர் கே. பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' (1987) திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டது. தனது குடும்பத்திற்காகப் போராடும் ஒரு நர்சின் வாழ்க்கையை சித்தரிக்கும் இத்தொடர், பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கதைக்களத்தின் தாக்கத்தால், மலையாளம் (பவானா), தெலுங்கு (சாதனா), கன்னடம் (ராதிகா) மற்றும் மராத்தி (மாஜி மானசா) ஆகிய மொழிகளிலும் இது வெற்றிகரமாகத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

கதாநாயகிக்கு தொடர்ந்து பல சோதனைகளும், குடும்ப உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயல்களும் மட்டுமே கதையில் மீண்டும் மீண்டும் காட்டப்படுவதும், குடும்பத்தில் உள்ள சிலரின் சுயநலமான நடவடிக்கைகளும் சில சமயம் சலிப்பையும், யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு இருப்பதாகவும் தோன்றுகிறது. கயலுக்கு எதிராக சதி செய்யும் பெரியப்பா குடும்பம் காட்டும் சுயநலமும், வில்லியின் கொடூரமான திட்டங்களும் சில நேரங்களில் மிகைப்படுத்தலாக தோன்றுகிறது. ஆனால் பல இன்னல்களுக்கு இடையே கயல் தனது குடும்பத்திற்காக போராடும் விதமும், பெண்களை மையப்படுத்தும் கதையம்சமும் பார்வையாளர்களால் பெரிதும் ரசிக்கப்படுகிறது.

சமீபத்திய கதைக்களத்தில் ஆனந்தியை கண்டுபிடிக்க புதிய வியூகத்தை வகுக்கும் கயல். பேசாம நாம அந்த மீனாட்சி வீட்டுக்கே போய் பார்க்கலாமா? என்று கயல் கேட்பதும், அதற்கு மீனாட்சி வீட்டுக்கா என்று கேட்க, இவ்வளவு தூரம் கிரிமினல் தனமாக யோசித்து திட்டமிடுபவர்கள் யாரும், தங்களை மீனாட்சி வீட்டிற்குள் வந்து தேட மாட்டார்கள் என்று நினைத்து அங்கேயே மறைந்திருக்க வாய்ப்புள்ளது என்று கயல் கணிக்கிறார்.

Kayal Serial
Kayal Serial

மீனாட்சியின் கணக்கை பொய்யாக்கும் விதியின் விளையாட்டாக சாலையில் காரில் செல்லும் பொழுது கயலின் கவனத்தை ஈர்க்க ஆனந்தி முயற்சி செய்வதும், அதனால் அரங்கேறும் உச்சகட்ட பரபரப்பு என்று கயல் தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அத்துடன் தலையில் அடிபட்டு குப்பைக் கிடங்கில் மயங்கிய நிலையில் கிடக்கும் எழிலை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ப்பதும் என சீரியல் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.

ஆனந்தி கௌஷிக் திருமணத்தை விரைந்து முடிக்க நினைக்கும் முயற்சியாக ஆனந்தியை கௌஷிக் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவசரத் திருமணம் செய்ய பிளான் போடுவதும், கயலின் தேடலுக்கு திருப்புமுனையாக கயலுடன் வேலை செய்யும் பெண் கயலுக்கு போன் செய்து ஆனந்தியை மருத்துவமனையில் பார்த்ததாக கூறுவதும், அரங்கேறப் போகும் கட்டாய திருமணத்திலிருந்து ஆனந்தியை கயல் காப்பாற்றுவாளா?

சன் டிவியில் 'மூன்று முடிச்சு', 'மருமகள்' போன்ற புதிய சீரியல்கள் களமிறங்கியுள்ள நிலையிலும், 'கயல்' சீரியல் தனக்கான பிரைம் டைம் இடத்தை தக்கவைத்துக் கொண்டு டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
தன் கண்ணையே ஈசனுக்கு அர்ப்பணித்த கமலக்கண்ணன் சக்ராயுதம் பெற்றது எப்படி?
கயல் சீரியல்
logo
Kalki Online
kalkionline.com