சின்னத்திரையில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியல்கள்..!

ஜூன், ஜூலை மாதங்களில் இல்லங்களை ஆக்கிரமிக்கத் தயாராகும் பிரம்மாண்ட மெகா தொடர்களின் முழு அட்டவணை.
புதிய சீரியல்
புதிய சீரியல்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

சின்னத்திரையில் விஜய், சன் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் மற்றும் வரவிருக்கும் புத்தம் புதிய சீரியல்களின் விவரங்களை காணலாம்.

ஒண்ணா இருக்க கத்துக்கணும்:

விஜய் டிவியில் இத்தொடர் ஜூலை 29 முதல் தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா இந்த சீரியலில் ஜோடியாக நடிக்கிறார்கள். முதலில் லட்சுமி மெஸ் என்று சொல்லப்பட்ட இத்தொடர் ஒண்ணா இருக்க கத்துக்கணும் என்று பெயரிடப்பட்டு, இந்த சீரியலுடைய ப்ரோமோக்களும் ஏற்கனவே வெளிவந்து விட்டது. குடும்பங்களின் உறவுகளை சொல்லும் குடும்ப உணவகத்தின் கதை இது. இத்தொடர் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

காதல் காதல் காதல்:

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய சீரியல் "காதல் காதல் காதல்". இது ஒரு சுவாரசியமான முக்கோண காதல் கதை என்ற பாணியில் அமைய உள்ளது. மூன்று விதமான காதல் கதைகளை மையப்படுத்தி இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மெகாத் தொடரை பிரபல இயக்குனர் அழகர் இயக்குகிறார். விஜய் டிவி தற்போது இந்த சீரியலின் காதல் 1, காதல் 2, காதல் 3 மற்றும் "இந்த காதல் கதையோட மெயின் வில்லனே அப்பா தான்" போன்ற விறுவிறுப்பான பல ப்ரோமோக்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த சீரியல் ஒளிபரப்பாகும் தேதி மற்றும் நேரம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி விரைவில் வெளியிட உள்ளது.

watching tv serials
Watching tv serials

சாமந்தி:

தமிழில் சன், விஜய் தொலைக்காட்சிகளுக்கு அடுத்து ரசிகர்களை அதிகம் கவர்வது ஜீ தமிழ் சேனல் தான். அதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கும், தொடர்களுக்கும் என்றே ரசிகர்கள் அதிகம் உள்ளனர். ஜீ தமிழில் சாமந்தி - ஜூலை 6ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடர். இந்தியாவின் நம்பர் 1 பெண் தொழிலதிபராக வேண்டும் என்ற லட்சியத்தைக் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்ட(Promo) காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இத்தொடரை சரிகம நிறுவனம் தயாரிக்கிறது. சித்தி 2 தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்த நடிகை ப்ரீத்தி ஷர்மா இத்தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பைப் பெற்ற பத்மதி சந்தியாராகம் என்ற தொடரின் அதிகாரப்பூர்வ தமிழ் மறுஆக்கம் ஆகும்.

'மூக்குத்தி அம்மன்' தொடர்:

ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் மற்றொரு புதிய தொடர் மூக்குத்தி அம்மன். இதற்கான அதிகாரப்பூர்வ விளம்பரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. பக்தி, குடும்ப உறவுகள் மற்றும் ஆன்மீகத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய மெகா தொடராக இது உருவாகியுள்ளது. 'மூக்குத்தி அம்மன்' தொடருக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளதே தவிர, அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சீரியலில் அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நித்யா தாஸ் நடிக்கிறார். இதே பெயரில் நயன்தாரா நடிப்பில் வெளியான 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

துளசி:

சன் தொலைக்காட்சியில் மே மாதத்திலிருந்து ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ள புதிய குடும்பத் தொடர். குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. தன் குடும்பத்தை ஒன்று சேர்த்து, தனது குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் சந்தோஷத்தை எந்த விலையையும் கொடுத்தாவது நிலைநிறுத்தப் போராடும் ஒரு நல்ல உள்ளம் படைத்த தாயின்(துளசி) வாழ்க்கைப் போராட்டமே இத்தொடரின் முக்கிய கதையாகும். இதில் தவற விடும் எபிசோடுகளை சன் நெக்ஸ்ட் செயலி வாயிலாக எந்நேரமும் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com