முடிவுக்கு வரும் சுந்தரி தொடர்… ரசிகர்கள் கவலை!

Sundari Serial
Sundari Serial
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடருக்கு பெரிய ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் இந்தத் தொடர் விரைவில் முடியவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழ் சீரியல்களுக்கு பெயர்போன சன் டிவியில் கயல், சிங்கப்பெண்ணே, மூன்றுமுடிச்சு, மருமகள், சுந்தரி போன்ற சீரியல்கள் கடந்த வாரத்திற்கான டிஆர்பியில் டாப்பில் வந்தன. இனியா தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடர்தான் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது.

இந்தத் தொடரில் நாயகியாக நடித்த கேப்ரியல்லா செல்லஸ் இந்த தொடரின்மூலமே பிரபலமாகினார். சுந்தரி பாகம் 1ல் கணவனால் துரோகம் செய்யப்பட்ட கிராமத்து பெண், போராடி கலெக்டர் ஆகிறார். ஸ்ரீகோபிகா நீலநாத் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெய் ஸ்ரீனிவாஸ், மனோகர் கிருஷ்ணா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சுந்தரி சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சீரியலின் முதல் சீசன் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஒளிபரப்பானது.  முதல் சீசன் முடிவடைந்த இரு தினங்களிலேயே அதன் இரண்டாவது சீசனை தொடங்கினர். அதில் 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் சுந்தரி ஐஏஎஸ் ஆன பின்னர் என்னென்ன சவால்களை சந்திக்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை உடன் நகர்த்தி வந்தனர்.

இதையும் படியுங்கள்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கோமதியை காப்பாற்ற மீனா செய்த செயல்… உச்சகட்ட கோபத்தில் பாண்டியன்!
Sundari Serial

இரண்டாம் பாகத்தில், தனது கணவரின் மற்றொரு மனைவியின் குடும்பத்தை ஏற்றுக்கொண்டு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக கொண்டு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த சீரியலில் கடைசி எபிசோட் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதன் கடைசி எபிசோட் வரவுள்ளது. சன்டிவி இதற்கு முன்னர் பல ஹிட் சீரியல்கள் ஓடின. ஆனால், இந்த சுந்தரி சீரியல்தான் அதிக நாட்கள் ஓடிய சீரியலாக உள்ளது.

சுந்தரி சீரியலின் தயாரிப்பாளர் தயாரிக்கும் ஒரு புதிய சீரியலின் அப்டேட் சில நாட்கள் முன்பு வெளியானது. அதாவது ரஞ்சனி என்ற சீரியல் ப்ரோமோ வெளியிடப்பட்டது. இதுவும் ஒரு பெண் சார்ந்த கதையாகத்தான் இருக்கிறது. சுந்தரி சீரியலுக்கு பதிலாக இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com