பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கோமதியை காப்பாற்ற மீனா செய்த செயல்… உச்சகட்ட கோபத்தில் பாண்டியன்!

Pandian Stores Update
Pandian Stores Update
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், மீனா சாப்பாடு வேண்டுமென்றால் நான் வாங்கித் தருகிறேன் என்று சொன்னதும், பாண்டியன் பணத் திமிரா என்று கேட்டு கோபப்படுகிறார். அந்தவகையில், மீனா ஏன் அப்படி கேட்டிருக்கிறார், என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போம்.

அப்பாவின் பாசத்தை கதைக்களமாக கொண்டு ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.  அந்தவகையில் தற்போது கோமதியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். இதனால், கோமதி மிகவும் வருத்தமடைகிறார். ராஜியும் தனது அப்பத்தாவிற்கு உடம்பு சரியில்லை என்று வருத்தமாக உள்ளார். கோமதி இந்த சமயத்தில்கூட தனது அம்மாவைப் பார்க்க முடியவில்லையே என்று சொல்லி புலம்புகிறார்.

ஆனால், மறுபக்கம் அப்பத்தா எழுந்து உட்கார்ந்து நான் நன்றாகத்தான் இருக்கிறேன். உடம்பு சரியில்லாதது போல் நடித்தேன் என்று மருமகளிடம் கூறுகிறார். அவர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதும், எனக்கு வீட்டில் நிம்மதியே இல்லை. அதனால்தான் இங்காவது நிம்மதியாக இருக்கலாம் என்று வந்தேன் என்று கூறுகிறார்.

இதைத்தொடர்ந்து சக்திவேலிடம் அவர் மனைவி, உங்க அம்மா உங்களையெல்லாம் பார்த்தால் டென்ஷனாகி விடுவாங்க. நீங்க இங்க இருக்காதிங்க என கூறி அவரை அனுப்பி வைக்கின்றார். 

கோமதி கவலையில் இருக்கும்போது பாண்டியன் அதான் உங்கம்மாவுக்கு ஒன்னு இல்லனு டாக்டர் சொல்லிட்டாங்கள போய் சமைக்கிற வேலைய பாரு என்று சொல்கிறார். ஆனால், கோமதிக்கு சமைக்கவே முடியவில்லை. உடனே மீனா தான் சமைப்பதாக கூறுகிறார். கோமதி உன்னால் முடியாது வேண்டாம் என்று கூறுவிடுகிறார். தங்கமயிலும் நானும் கூட சமைக்கிறேன் என்று சொன்னதும் கோமதி அதுவும் வேண்டாம் என்று கூறுகிறார்.

இதனால், மீனா ஹோட்டலில் சாப்பாடு வாங்கப் போகும் விஷயத்தை பாண்டியனிடம் சொல்கிறார். ஹோட்டலில் சாப்பிட்டால் உடம்பிற்கு கேடு வரும் என பாண்டியன் சொல்கின்றார். அதற்கு மீனா பெரிய ஹோட்டலாக பார்த்து வாங்கலாம் என கூற அதற்கெல்லாம் நிறைய செலவாகும் வேண்டாம் என பாண்டியன் மறுக்கின்றார். இதனால் கடுப்பான மீனா என்னிடம் பணம் இருக்கு, நான் தருகிறேன் என கூறவும் பாண்டியன் உச்சகட்ட கோபத்திற்கு ஆளாகிறார். நீ சம்பாதிக்கிற திமிர்ல இப்படியெல்லாம் பேசுறியா என கூறி மீனாவை திட்டுகிறார் பாண்டியன்.

இதையும் படியுங்கள்:
ஸ்டார் படம் குறித்து நான் கணித்ததைதான் ரசிகர்களும் கூறினர்! – கவின்
Pandian Stores Update

இதனையடுத்து கோமதி தனது அம்மாவுக்கு தானே சமைக்கிறார். உடனே இதை எப்படி கொண்டுப்போவது என்று கேட்கின்றனர். அதற்கும் ஏற்பாடு செய்தாகிவிட்டது. தம்பி கொண்டு போறேன்னு சொல்லிட்டான் என்று கோமதி சொல்கிறார். மீனாவும் இதையே பாட்டி சரியாகும்வரை செய்யலாம். மாமாவுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார்.

logo
Kalki Online
kalkionline.com