வெங்கட் பட்டின் 'டாப் குக்கு டூப் குக்கு' ஷோ... போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

Top Cooku Dupe Cooku
Top Cooku Dupe Cooku

விஜய் டிவிக்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் மிகவும் பேமஸான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இதுவரை 4 சீசன் ஓடியுள்ள நிலையில், தற்போது 5வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த சீசனில் செஃப் வெங்கட் பட் மற்றும் சில கோமாளிகள் விலகியுள்ளனர். இவருக்கு பதிலாக நிகழ்ச்சியில் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் வந்துள்ளார். எப்போதும் உள்ள சீசன் அளவு இந்த சீசன் இல்லை என்றே பெயர் எடுத்துள்ளது. பெரியளவில் காமெடி இல்லை என்றே ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகும் போதே புதிய நிகழ்ச்சியில் சந்திக்கலாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். தொடர்ந்து சன் டிவியில் குதித்த வெங்கட் பட், குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார். அதுமட்டும் இன்றி விஜய் டிவியில் இருந்த ஜிபி முத்து, மோனிஷா, பரத், தீபா போன்ற கோமாளிகளும் சன் டிவிக்கு தாவி உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கார் விபத்தில் சிக்கி பலியான பிரபல சீரியல் நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!
Top Cooku Dupe Cooku

ஏற்கனவே விஜய் டிவி பிரியங்கா, இயக்குனர் விடிவி கணேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா, பாடகர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி இயக்குனரும் நடிகருமான சிங்கம் புலி, நடிகைகள் சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, சிவாங்கியின் தாயார் பின்னி, கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி, வில்லன் நடிகர் தீனா ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்க உள்ளதாக அறிவித்து உள்ளனர். இந்நிகழ்ச்சி வருகிற மே 19-ந் தேதி முதல் ஞாயிறு தோறும் பகல் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com