வந்தாச்சு சூப்பர் சிங்கர் 10 ஆடிஷன்.. எங்க நடக்குது தெரியுமா?

சூப்பர் சிங்கர் 10
சூப்பர் சிங்கர் 10

பிரபல தனியார் தொலைகாட்சியில் பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சீனியர், ஜூனியர் என அனைவருக்கும் இந்த மேடையில் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்த மேடையில் தோன்றிய பலரும் தற்போது பின்னணி பாடகர்களாக உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் சின்னகுயில் சித்ரா, அனுராதா ஸ்ரீராம், பென்னி, உன்னி கிருஷ்ணன், மனோ என பலரும் நடுவர்களாக வருவார்கள். குழந்தைகளில் மனம் வருந்தாதவாறு பிழைகளை கற்று கொடுத்து, நல்ல பாடகர்களாக உருவாக்கி வருகின்றனர். அவ்வப்போது விருந்தினராக இந்த நிகழ்ச்சிக்கு எம்.எஸ்.வி., எஸ்.பி.பி., உள்ளிட்ட இசை ஜாம்பவான்களும் வருவார்கள். இவர்கள் முன் பாடுவதை போட்டியாளர்கள் பெரும் மகிழ்ச்சியாக கருதுவார்கள். இப்படி பல கலைஞர்களை உருவாக்கிய இந்த மேடையில் தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 9வது சீசன் நடைபெறுகிறது.

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் 10க்கான ஆடிஷன் தேதி வெளியாகியுள்ளது. புதிய அத்யாயத்தை தொடங்கும் பிரபல தொலைக்காட்சி, நாளைய பாடகர்களை தேர்ந்தெடுக்கவுள்ளனர். நாளை 23. 09.2023 அன்று காலை 9 மணி முதல் புதுக்கோட்டை டெல்லி பப்ளிக் பள்ளி, 201 திருச்சி சாலை, திருகோகர்ணம், எம்ப்லாய்மெண்ட் ஆபிஸ் எதிரில் ஆடிஷன் நடைபெறுகிறது. முதலில் வருபவர்களே முன்னுரிமை என்பதால் அனைவரும் நாளை சென்று ஆடிஷனில் பங்கேற்று சிறந்த பாடகராக வாருங்கள்.. இந்த ஆடிஷனில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com