

விஜய் தொலைக்காட்சி நடத்திவரும் சூப்பர் சிங்கர் சீசன் 11 இசை நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி (Grand Finale), 01.02.2026 அன்று மதியம் 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை நேரலையாக நடைபெற்றது. பல பகுதிகளில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சீசனில், இறுதிச்சுற்றுக்கு 7 போட்டியாளர்கள் தேர்வானார்கள்.
அதில் சரண்,ஆப்ரஹாம்,நிக்கில், தர்ஷனா, மீனாட்சி, ரிஷாதனா, தவசீலிணி, ஆகியோா் தலா இரண்டு பாடல்களை பாடினாா்கள். நிகழ்ச்சியை வழக்கம் போலவே மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கினார்கள். நடுவர்களாக ஆரம்பத்தில் இருந்து தொடந்து வந்த மிஷ்கின், கங்கைஅமரன், உன்னிகிருஷ்ணன், பாடகி சித்ரா, அனுராதாஶ்ரீராம், மற்றும் பலர் கலந்துகொண்டாா்கள்.
வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கிய சத்யா நிறுவனம், டி.ஏ.சி. பில்டர்ஸ், கே.ஏ.ஜி. டைல்ஸ், பபுள் பெயின்ட்ஸ் மற்றும் வி.பி.ஜே. ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு விஜய் தொலைக்காட்சி சார்பில் மரியாதை செய்யப்பட்டது. நலிந்த கலைஞர்களான வெங்கடாசலம் மற்றும் பூமணி ஆகியோருக்கு கே.ஏ.ஜி. நிறுவனம் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. இறுதி சுற்றுக்கு வர இயலாமல் சிறப்பாக பாட்டுப்பாடிய பாடகி ஒருவருக்கு,விபிஜெ சாா்பாக தங்கமைக் வழங்கப்பட்டது.
வெற்றியாளர்கள் தோ்வு செய்யப்பட்டாா்கள், ஆறாவது இடம் தர்ஷனா,தோ்வானாா் அவருக்கு செல்போன் வழங்கப்பட்டது.5வது இடம் ஆப்ரஹாம் ,4 வது இடம் தவசீலினி,ஆகிய இருவருக்கும் தலா 3 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவதாகRunner up (3 வது இடம்) மீனாட்சிக்கு 5 லட்சம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து டைட்டில் வின்னராக நிக்கில் தோ்வு செய்யப்பட்டாா். அவருக்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது. இறுதியாக 2 வது இடத்திற்கு சரண்ராஜ் மற்றும் டிஷாதனா தோ்வானாா்கள். அவர்களுக்கு தலா 10லட்சம் வழங்கப்பட்டது.
வெற்றியாளர்கள் விவரம்:
டைட்டில் வின்னர் (1-ம் இடம்): நிக்கில் (ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது).
2-ம் இடம்: சரண்ராஜ் மற்றும் ரிஷாதனா (தலா ரூ. 10 லட்சம்).
3-ம் இடம் (Runner-up): மீனாட்சி (ரூ. 5 லட்சம்).
4-ம் இடம்: தவசீலினி (ரூ. 3 லட்சம்).
5-ம் இடம்: ஆப்ரஹாம் (ரூ. 3 லட்சம்).
6-ம் இடம்: தர்ஷனா (விலையுயர்ந்த செல்போன்).
பொதுவாக பரிசு வழங்குவதில் வழக்கம்போலவே விஜய் தொலைக்காட்சி கொஞ்சம் சொதப்பியதுஎன்றே கருதலாம் .ஆரம்பத்தில் இருந்தே இளையராஜா குரலில் பாட்டுக்களை பாடிய சரண்ராஜ் இறுதிச்சுற்றான கிரான்ட் பினாலே நேரலையில் சிறப்பாக பாடியதோடு பாடலுக்கேற்ற பாத்திரமாகவே மாறினாா்.பன்முக கலைஞர்என அவரை சொல்லலாம் .அனைவரையும் அழவைத்தாா் .
வீடு அவருக்குதான் கிடைக்கும் என பலரும் எதிா்பாா்த்திருந்த நிலையில் ஏமாற்றமே கிடைத்தது.பரிசுகளை டிஏசி, கேஏஜி,மற்றும் இதர நிறுவனங்களும் வழங்கினாா்கள். வழக்கம்போலவே யாா் யாா் எத்தனை வாக்குகள் பெற்றாா்கள் எனவும் அறிவிக்கவில்லை.பின்னர் எதற்காக ஓட்டு போடவேண்டும் என்பது சில சீசன்களாக மர்மவாகவே உள்ளது வருத்தமளிக்கிறது..