SARVAM MAYA
SARVAM MAYA

விமர்சனம்: சர்வம் மாயா (2025) - 'சூப்பர் நேச்சுரல்' ரொமாண்டிக் காமெடி ட்ராமா..!

Published on
ரேட்டிங்க்(3.5 / 5)

25/12/2025 அன்று வெளியாகி மெகா ஹிட் ஆகி 150 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த இந்தப்படம் நிவின் பாலிக்கு நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது 30/01/2026 முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ் டப்பிஙகில் கிடைக்கிறது.

ஸ்பாய்லர் அலெர்ட்

நாயகன் ஒரு வசதியான நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவன். அப்பா பூஜை, புனஸ்காரம் என்று இருக்க, 18 வது வயதில் அம்மா திடீர் என இறந்து விட்டதால், அவன் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகன் ஆகிறான். குடும்பத்தைப் பிரிந்து நகரத்துக்கு வருகிறான். கிதார் வாசிக்கும் கலையைக் கற்று சினிமாவில் சாதிக்கும் ஆசையை வளர்த்துக்கொள்கிறான். ஆனால் சான்ஸ் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் வருமானத்துக்காக சொந்த ஊருக்கு திரும்ப வருகிறான். இரண்டு மாதங்கள் இங்கே இருந்தாக வேண்டிய சூழல்.

அப்போது ஒரு வீட்டில் ஒரு பையனுக்குப் பேய் பிடித்து விட்டது எனவும். அந்தப் பேயை ஓட்ட வேண்டும் எனவும் நாயகன் அழைக்கப்படுகிறான். அங்கே போய் பூஜை செய்யும்போது பாதியிலேயே திடீர் என அந்தப் பையனுக்கு குணம் ஆகி விடுகிறது . நாயகன் வீட்டுக்குத் திரும்பி விடுகிறான்.

ஆனால் அன்று இரவில் இருந்து நாயகன் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் உருவாகிறது. நாயகன் வீட்டில் அவனது அறையில் ஒரு இளம் வயது பெண் பேய் அவன் கண்களுக்குத் தெரிகிறது.

வழக்கமான பேய்கள் போல அது அவனை பயமுறுத்தவில்லை, கோர முகம் காட்டவில்லை, ஒரு தோழியைப்போல பழகுகிறது.

ஆரம்பத்தில் தயங்கிய நாயகன் பின் அந்தப் பெண் பேயுடன் சகஜமாகப் பழக ஆரம்பிக்கிறான். அந்தப் பெண் பேய்க்கு தன் பெயர் என்ன? தான் எதனால் இறந்தோம் என்பது தெரியவில்லை.

உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் படத்தில் கார்த்திக் ரோஜாவுக்கு பாடகி ஆக உதவுவது போல அந்தப் பெண் பேய் நாயகன் சினிமாவில் கிடாரிஸ்ட் ஆக உதவுகிறது.

சினிமாவுக்கு கிடார் வாசிக்க மும்பை போகும் சூழலில் நாயகனுக்கு ஒரு பெண்ணின் நட்புக் கிடைக்கிறது. அது காதலாக உருமாறும் வேளையில் அந்தப் பெண் பேய்க்கு பொஸசிவ்னெஸ் வருகிறது. ஐ லவ் யூ சொல்கிறது.

அந்தப் பெண் பேயின் முன் கதை என்ன? நாயகன் என்ன முடிவு எடுத்தான்? என்பது மீதித் திரைக்கதை.

நாயகன் ஆக நிவின் பாலி பிரமாதமாக நடித்து இருக்கிறார். சங்கோஜம், பயம், ஈகோ, அப்பா மீதான பாசம். இரு பெண்களிடையே சிக்கித் தவித்தல் என பல காட்சிகளில் அருமையாக ஸ்கோர் செய்கிறார்.

நாயகி ஆக, பெண் பேயாக, துறுதுறு பேச்சு அழகி ஆக, ரியா ஷிபு அட்டகாசமான நடிப்பு. அவரது உடல் மொழி , குரல் , நடிப்பு எல்லாம் அபாரம். மாடர்ன் டிரஸ் போட்ட கலர்புல் நதியாவாக ஜொலிக்கிறார். அவரது பிளாஷ்பேக் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.

இன்னொரு நாயகி ஆக பிரித்தி முகுந்தன் பின் பாதியில் வந்தாலும் குறைவான நேரத்தில் நம் மனதில் நிறைந்து விடுகிறார். அவரது முக அழகும், கண்ணியமான உடைகளும், நடன அசைவுகளும் சிறப்பு. முதல் நாயகியின் அம்மாவாக மெதில் தேவிகா, அப்பாவாக வினீத் இருவருக்கும் நல்ல குணச்சித்திர நடிப்பு. நாயகனின் கசின் ஆக வரும் அஜூ வர்கீஸ் காமெடியில் களை காட்டும் நடிப்பு. ப்ரியா பிரகாஷ் வாரியர் கெஸ்ட் ரோலில் வருகிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: THE RIP (2026) - க்ரைம் ஆக்சன் திரில்லர்..!
SARVAM MAYA

ஒளிப்பதிவு சரண் வேலாயுதன். இரு நாயகிகளையும், நாயகியின் அம்மாவையும் கூட க்ளோஸப்பில் அழகாகக் காட்டி இருக்கிறார். ஜஸ்ட்டின் பிரபாகரன் இசையில் இரு பாடல்கள் அருமை. பின்னணி இசையும் சிறப்பு. அகில் சத்யன், ரத்தின் ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் இணைந்து எடிட் செய்து இருக்கிறார்கள். 146 நிமிடங்கள் ஓடுகிறது. கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் அகில் சத்யன்

சபாஷ் டைரக்டர்

  1. பயமுறுத்தும் பேய், காமெடிப்பேய் வரிசையில், ஒரு பீல் குட் ரொமாண்டிக் பேய் கேரக்ட்டர் அருமை.

  2. முதல் 30 நிமிடங்கள் மெதுவான திரைக்கதையில் அனைத்துக் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்து அவர்களோடு ஆடியன்ஸுக்கு எமோஷனல் கனெக்ட் கொடுத்த விதம்.

  3. யாரம் எதிர்பாராத க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: THE BIG FAKE (2026) - க்ரைம் ட்ராமா..!!
SARVAM MAYA

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்

  1. நாயகனின் கண்களுக்கு மட்டும் அந்தப் பெண் பேய் எதனால் தெரிகிறது என்பதற்கு க்ளைமாக்சில் விடை கிடைக்கிறது, ஆனால் அந்தப் பெண் பேயின் அம்மா, அப்பாவுக்கு காட்சி அளித்து ஆறுதல் சொல்லாதது ஏன்?

  2. கடவுள் நம்பிக்கை இல்லாத நாயகன் மீண்டும் எப்படிக் கடவுளை நம்புகிறான் என்பதற்கு விளக்கம் இல்லை.

  3. காதலில் பிரேக்கப்பில் சோகம் ஆகும் இரண்டாம் நாயகி கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் திடீர் என நாயகனுடன் காதலில் விழுவது எப்படி?

லாஜிக் மிஸ்டேக்

க்ளைமாக்ஸ் 1988ல் வெளியான  என் ஜீவன் பாடுது படத்தின் முடிவை நினைவுபடுத்துகிறது.

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13 + குடும்பத்துடன் பார்க்கலாம்.

சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஒரு பீல் குட் ரொமாண்டிக் மூவியைப் பார்க்க விரும்புபவர்கள் அவசியம் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com