பிக்பாஸ் சீசன் 8ல் தொடர்ந்து ஜாக்குலினை டார்கெட் செய்து சண்டைப் போட்டு வருகிறார்கள். இதுகுறித்தான அப்டேட்டை பார்ப்போம்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போ இரண்டு வீடுகளும் இணைக்கப்பட்டிருக்கிறது.
இதுவரை ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா மற்றும் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டனர்.
அந்தவகையில் பொம்மை டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் ஜாக்குலின் செய்த செயலால் தர்ஷிகா மிகவும் கோபப்பட்டார். இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரின் பெயர்க்கொண்ட பொம்மையை டால் ஹவுஸ் ஸ்லாட்டில் வைக்க வேண்டும். இல்லை என்றால், அவர்கள் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அப்போது ரஞ்சித் தர்ஷிகாவின் பொம்மையை எடுத்து அங்கு வைக்க செல்வார். அப்போது ஜாக்குலின் அந்த பொம்மையை வாங்கிவிட்டு அவருடைய பொம்மையை கொடுப்பார். தர்ஷிகா கேம்னா இண்டிவிஜுவலா விளையாடுங்க… விளையாட முடியலனா வெளில போயிருங்க என்று கோபத்தில் கூறிக்கொண்டே அங்கிருந்து வேகமாக சென்றார்.
இதனையடுத்து இன்று விஜே விஷால் கோபப்பட்டு கத்திவிட்டார். பஸ்ஸர் அழுத்திய உடன் போட்டியாளர்கள் அனைவரும் ஓடிச்சென்று பொம்மைகள் எடுப்பர். அடிபடாம இருக்கட்டும் என சொல்லிக் கொண்டிருந்தார் தீபக். பொம்மையை எடுப்பதில் மீண்டும் பிரச்சனையாகிவிட்டது. நீ புரிந்து கொள் ஜாக். யாரும் அடிக்கணும்னு அடிக்க மாட்டாங்க என்றார் விஷால். இப்ப யாரும் அடிக்கணும்னு நான் சொல்லவில்லையே என்று பதில் அளித்தார் ஜாக்குலின்.
அப்படினா தெளிவாகவே இரு என விஷால் சொல்ல ஜாக்குலின் கடுப்பாகி நான் சொன்னேனா என கேட்டார். நீ தெளிவா இருனு தான் சொல்றேன் என விஷால் மீண்டும் ஆரம்பிக்க, நான் தெளிவாகத் தான் இருக்கேனு ஜாக்குலின் பொங்கினார்.இவர்கள் இருவரும் மேலும் மேலும் கத்திக்கொண்டிருந்தனர். உடனே ராயன் ஜாக்குலினை சமாதானம் செய்தார்.
இதற்கு ரசிகர்கள், இந்த மாதிரி போட்டியெல்லாம் வைக்காமல் சண்டைப் போடும் போட்டியை மட்டும் வையுங்கள் என்று கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.