பிக்பாஸ் 8: கையெடுத்து கும்பிடுவதில் என்னடா தப்பு… இது ஒரு பிரச்னையா?

BB 8
BB 8
Published on

பிக்பாஸ் 8ல் அருண் மற்றும் மஞ்சரி இடையே சண்டை நடக்கிறது. அதுவும் கையெடுத்து கும்பிடுவதற்காகவெல்லாம் சண்டை வருகிறது என்றால் கொஞ்சம் ஓவராக இல்லை?

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. போன சீசனில் எப்படி பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என்று இரு வீடுகளாக பிரித்தனரோ அதேபோல் ஆண்கள் வீடு, பெண்கள் வீடு என்று பிரித்திருக்கின்றனர். இந்த இரு டீமுக்கும் இடையே போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் இப்போ இரண்டு வீடுகளும் இணைக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை ரவீந்திரன், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா ஆகியோர் எவிக்ட் செய்யப்பட்டனர். ஒரு வாரம் நோ எவிக்ஸன் மற்றும் வைல்டு கார்டு என்ட்ரி நடைபெற்றது. இதன்மூலம் 6 பேர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். இவர்களில் ரியா மற்றும் வர்ஷினி எவிக்ட் செய்யப்பட்டனர்.

இந்த வாரம் நடத்தப்பட்ட பொம்மை டாஸ்க்கில் இருந்தே வீட்டில் தொடர்ந்து சண்டையாக இருக்கிறது. இப்படியிருக்க இன்று காலையில் மீண்டும் ஒரு சண்டை வந்திருக்கிறது. பிரெட்டை டோஸ்ட் பண்ணிக் கொடுக்கலாமே என பேச்சு கிளம்பியது. முதலில் நீங்க எங்களை வேற ப்ரொஜக்ஷன்ல பார்க்கிறீங்க என மஞ்சரியிடம் கூறினார் அருண் பிரசாத்.

இதையும் படியுங்கள்:
தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா… மொத்த சொத்தையும் நன்கொடை அளித்த கொடை வள்ளல்!
BB 8

உடனே மஞ்சரி ட்ரிகர் பண்ணி பேசுறீங்க என்று பதிலுக்கு சொல்ல. மேடம், ப்ளீஸ் நான் ட்ரிக்கர்டா இல்லை என கையெடுத்து கும்பிட்டார் அருண் பிரசாத். இது தான் ட்ரிக்கரிங் என பாய்ந்தார் மஞ்சரி. உடனே தீபக் கையெடுத்து கும்பிடுவதில் என்னங்க தப்பு என்று கேட்க… மஞ்சரி நீங்க கேப்டன் மாறி பேசல என்று அவரிடம் பாய… தீபக் ஆம் நான் தீபக்காகதான் பேசுகிறேன் என்று கோபத்தில் கத்த. அருண் மஞ்சரி சண்டை, தீபக் மஞ்சரி சண்டையாக மாறிவிட்டது. தேவையில்லாம பேசுறீங்க என மஞ்சரி கடுப்பேற்ற என்ன தேவையில்லாமல் பேசுறேன் என கேட்டார் தீபக். இதையடுத்து பூந்தொட்டியில் இருந்து ரோஜாப்பூவை எடுத்தார் மஞ்சரி.

இதனையடுத்து ரசிகர்கள் மஞ்சரி எதோ சண்டைப் போடனும் என்று வேண்டுமென்றே சண்டைப் போடுகிறார். இது நன்றாகவே தெரிகிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com