எதிர்நீச்சல் 2 சீரியல் நேற்று ஆரம்பமான நிலையில், முதல் நாளே பலரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது.
எதிர்நீச்சல் 1 சீரியலில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தினால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை சீரியலை விரும்பிப் பார்த்தார்கள். அதில் ‘ஏமா ஏய்’ என்ற வசனம் சமூக வலைதளங்கள் எங்கும் இருந்தன. அதுமட்டுமின்றி குணசேகரனின் ஒவ்வொரு வசனங்களும் பிரபலமாகின.
இப்படி சீரியல் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தவர் திடீரென்று உயிரிழந்தார். இதனையடுத்து மீண்டும் சீரியலின் டிஆர்பி ரேட் குறைந்தது. விரைவில் சீரியலும் முடிவுக்கு வந்தது. தற்போது 6 மாதங்கள் கழித்து மீண்டும் சீரியலின் 2ம் பாகம் தொடங்கியது. இதன் முதல் நாளே ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளது.
கதிர் மற்றும் ஞானம் மனைவிகள் பேச்சை கேட்டு திருந்தினாலும் ரத்த உறவாக இருக்கும் அண்ணனின் நிலைமையை கண்டு குணசேகரன் மீது பாசத்தை கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு ஏற்ற மாதிரி விசாலாட்சியும், குணசேகரன் குணசேகரன் என்று புலம்பி தவிப்பதால் என்ன செய்வது எப்படி அண்ணனை வெளியே கூட்டிட்டு வருவது என்று தெரியாமல் ஞானம் மற்றும் கதிர் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வழக்கம்போல் கரிகாலன் குணசேகரனுக்கும் அவரது தம்பிகளுக்கும் எடுபிடி வேலைப் பார்க்கிறார். அம்மாவின் நிலைமை அறிந்து அவரைப் பார்க்க வந்த ஆதிரையை ஞானம் மற்றும் கதிர் கோபத்தால் பார்க்க விடாமல் தடுக்கிறார்கள்.
அங்கிருந்தவர்கள் உங்கள் அண்ணன் ஜெயிலுக்கு போனதற்கு காரணமே உங்கள் பொண்டாட்டிகள்தான், அவர்களைவிட்டு தங்கை மீது இவ்வளவு கோபம் ஏன்?என்று கேட்கிறார்கள்.
இதனை அடுத்து அம்மாவின் நிலைமையை மனைவிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஞானம் மற்றும் கதிர், ரேணுகா மற்றும் நந்தினிக்கு போன் செய்து பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் அவர்களின் கனவை நோக்கிச் செல்கின்றனர். ஈஸ்வரி, தனக்குத் தெரிந்த விஷயத்தை கஷ்டப்படும் குழந்தைகளுக்கு புரிய வைத்து அவர்களை பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என்று பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டார்.
பரதத்தின் மூலம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய குழந்தைகளுக்கு நான் பக்க பலமாக இருந்து அவர்களை வழிநடத்துவேன் என்று ரேணுகாவும் பரதநாட்டியம் சொல்லிக் கொடுத்து வருகிறார். நந்தினி சமயல் தொழிலையும், கணவர்களால் கொடுமைகளை அனுபவிக்கும் மனைவிகளை ஜனனி ஊக்கப்படுத்தியும் வருகிறார்.
குணசேகரன் தற்போது வெளியே வருவது கடினம். ஆனால், அவர் வெளியே வந்தால், அவரை எதிர்கொள்வது வீட்டுப் பெண்களுக்கு மிகவும் கடினமாகிவிடும்.