விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலின் மூன்றாவது சீசன் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி 1 சீரியலில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் இணைந்து நடித்தனர். இந்த சீரியலில்தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இப்போது 2 குழந்தைகள் உள்ளனர். 2019ம் ஆண்டு ராஜா ராணி சீரியல் 1 முடிவுக்கு வந்த நிலையில், 2020ம் ஆண்டு ராஜா ராணி 2 தொடங்கப்பட்டது.
இதில் சஞ்சீவுக்கு பதிலாக சித்து நடித்தார். ஹீரோயினாக சில காலம் ஆல்யா மானசா நடித்தார். ஆனால், அந்த நேரத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் பாதியிலேயே சீரியல் விட்டு விலகினார். பின்னர் வேறு ஒரு ஹீரோயின் நடித்து வந்தார். இந்த கதை ஹிந்தி சீரியலின் ஒரு ரீமேக் கதையாகும். கதையின் ஹீரோயின் சந்தியா ஒரு போலீஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவார். அதேபோல் சித்து ஒரு ஸ்வீட் கடை வைத்திருப்பார்.
இந்த ராஜா ராணி தொடரும் வெற்றிபெற்றதையடுத்து சென்ற ஆண்டு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து எப்போது ராஜா ராணி 3 வரும் என்பதுதான் ராஜா ராணி சீரியல் ரசிகர்களின் ஒரே எதிர்பார்ப்பு. இந்த நிலையில்தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் இயக்குனர் பிரவீனுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ஒருவர் இன்ஸ்டாவில் போட்டு ராஜா ராணி 3 Coming soon என்று பதிவிட்டிருக்கிறார்.
இதனையடுத்து ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து இவர்கள்தான் மீண்டும் இணைகிறார்களா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
இப்போது எந்த சீரியலும் முடியும் தருவாயில் இல்லை. ஏற்கனவே பிக்பாஸ் ஆரம்பித்ததால், விஜய் டிவியில் சில சீரியல்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டன.
ஒருவேளை நேரத்தை அட்ஜஸ்ட் செய்து ராஜா ராணி சீசன் 3 வந்தால் சின்னய்யா பெரிய ஐயா சத்தம்தான் எங்குத் திரும்பினாலும் கேட்கும்…