தளபதி 69 ஒரு ரீமேக் படமா? ரசிகர்கள் ஷாக்!

Thalapathy 69
Thalapathy 69
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on

தளபதி விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 69 படம் ஒரு ரீமேக் படம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்த நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது கட்சியைத் தொடங்கினார். வரும் 2026ம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டதையடுத்து கட்சிக் கொடியும் சின்னமும் அறிவிக்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து மாநாட்டிற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகின. இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் சமீபத்தில் கோட் படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், விஜயின் நடிப்பு அனைவரையும் திருப்தி படுத்தியது என்றே கூறலாம்.

தனது 69வது படத்துடன் தனது சினிமா பயணத்தை முடிக்கவிருப்பதாக விஜய் முன்பே தெரிவித்தார். அந்தவகையில் மாநாட்டுக்கான பூஜையும் தளபதி 69 படத்துக்கான பூஜையும் ஒரே நாளில் நடந்தது. விஜயின் 69வது படத்தை ஹெச். வினோத் இயக்கத்தில், கேவிஎன் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹ்க்டே நடிக்கவுள்ளார்., இவர் இரண்டாவது முறையாக ஜோடி சேர்கிறார். இதற்கு முன்னர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் நடித்தார். மேலும் இப்படத்தில்  பாபி தியோல், பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இப்படத்தின் கதைப் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது இது ஒரு ரீமேக் படமாம். பாலையா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் ஆகியோர் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காம். இது ஒரு தெலுங்கு படம். இது தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 130 கோடி வரை வசூல் செய்தது.

இதையும் படியுங்கள்:
பாகுபலி வில்லன் ராணாவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தது யார் தெரியுமா?
Thalapathy 69

இந்தப் படத்தின் காட்சிகளைக்கூட நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆம்! பாலையா காஜல் அகர்வாலை Aunty என்றழைப்பார். இதன் காட்சிகளை தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போட்டு ட்ரோல் செய்து வந்தனர்.

ஆனால், தமிழில் ரீமேக் செய்தால் ட்ரோல்போடும் அளவிற்கு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை காஜல் அகர்வால்தான் பூஜாவோ? ஸ்ரீலீலாதான் மமிதாவோ??

எது எப்படியோ தளபதியின் இறுதிப் படம் என்பதால், ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு படம் இருந்தால் போதும்!!

logo
Kalki Online
kalkionline.com