

28/03/2026 முதல் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் இப்போது தமிழ் டப்பிங்கில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த U படம் தான் இது.
2021ம் ஆண்டு வெளிவந்த The Woman In The Window படத்தின் கதைக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை. இரண்டும் வேறு வேறு கதை.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகிக்குத் திருமணம் ஆகி 20 வருடங்கள் ஆகிறது. 18 வயதில் மகள் இருகிறாள். நாயகி தன் கணவனுடன் தன் 20வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காகக் காரில் ஒரு இடத்துக்குப் போய்க்கொண்டு இருக்கிறாள். அப்போது திடீர் என்று ஒரு விபத்து. நாயகியின் கணவன் ஆள் அவுட். நாயகி தப்பிக்கிறாள்.
ஒரு வருடம் கழித்து நாயகியின் மகள் நாயகியை இன்னொரு துணை தேடிக்கொள்ளுமாறு வற்புறுத்துகிறாள். நம்ம ஊர் கல்யாண மாலை மாதிரி அந்த ஊர் மேரேஜ் ஆப் மூலம் நாயகிக்கு பார்ட்னர் தேடுகிறார்கள். அதில் சிக்கியவன் தான் நாயகன். பரஸ்பரம் அறிமுகம் மட்டுமே நடக்கிறது.
நாயகியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஒரு புது நபர் குடி வருகிறான். ஒரு ஆச்சரியமான விஷயம். ஆப் மூலம் பரிச்சயமான நபர் ஆன நாயகன் தான் எதிர் வீட்டு ஆள். நாயகியின் மகளின் வற்புறுத்தலால் நாயகி நாயகன் வீட்டுக்குப்போய் அறிமுகம் செய்து கொள்கிறாள். நாயகனைப் பற்றி சில விபரங்கள் தெரிந்து கொள்கிறாள்.
நாயகனுக்கு ஒரு அக்கா மட்டுமே. நாயகனை விட 15 வயது மூத்தவர். நாயகனின் மனைவி சமீபத்தில் தான் கொலை செய்யப்பட்டார். நாயகன் ஊரில் இல்லாதபோது இந்தக் கொலை நடந்திருக்கிறது. போலீஸ் இன்னமும் கொலைகாரனைக் கண்டு பிடிக்கவில்லை.
சில நாட்களில் பக்கத்து வீட்டுத் தோழி கொலை செய்யப்படுகிறாள். அவளது தொப்பி நாயகனின் வீட்டில் இருக்கிறதை நாயகி பார்த்து விடுகிறாள். நாயகன் மீது சந்தேகம் வருகிறது.
நாயகியின் மகளுக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவன் திடீர் என்று காணவில்லை. அவனும் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறான்.
இந்தக் கொலைகளை எல்லாம் செய்தது நாயகனா? வேறு நபரா? என்பதை நாயகி கண்டுபிடிப்பதே மீதி திரைக்கதை.
நாயகி ஆக டெரி போலோ கச்சிதமாக நடித்திருக்கிறார். படம் முழுக்க இவரது ராஜ்ஜியம் தான். நாயகன் ஆக டிலான் வால்ஸ் நடித்திருக்கிறார். இவர் தான் கொலைகாரனா? என்ற மர்ம முடிச்சு விலகும் வரை நெகடிவ் ஷேடில் கதாபாத்திர வடிவமைப்பு இருப்பதால் சாமார்த்தியமாக நடிக்க வேண்டிய கட்டாயம். கச்சிதமாக செய்திருக்கிறார்.
படத்தில் நடித்த மற்ற கேரக்டர்களும் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் ஓக்கே ரகம்.
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் ரிச்சர்ட் ஸ்விட்சர்.
சபாஷ் டைரக்டர்
குறைவான கேரக்டர்கள், ஒரே அபார்ட்மெண்ட் என்பதால் குழப்பம் இல்லாத கதை அம்சம்.
பின்னணி இசை படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மார்வலஸ். ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது.
ஓப்பனிங்க் சீனில் வரும் நாயகியின் கணவன் இறப்பில் இருக்கும் மர்மம்.
நாயகியின் கணவன், நாயகனின் மனைவி, நாயகியின் மகளது காதலன், பக்கத்து வீட்டுத் தோழி என நான்கு கொலைகளுக்கான காரணம், கொலையாளியின் நோக்கம் இவை அனைத்தும் ஏற்கத்தக்க விதத்தில் பொருத்தமாக சொன்ன விதம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில நெருடல்கள்
டிவி சீரிஸ் ஆக 2020ல் வெளியான The Neighbor In The Window சாயல் இந்தப் படத்தில் அதிகமாக இருக்கிறது.
பிரமாதமான திருப்பங்கள் எதுவும் படத்தில் இல்லை. எளிதில் யூகிக்க வைக்கும் காட்சி அமைப்புகள்.
மிக மெதுவாகச் செல்லும் திரைக்கதையில் கடைசி 20 நிமிடக்காட்சிகள் நல்ல வேகம் + விறுவிறுப்பு.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 13 + (குடும்பத்துடன் பார்க்கலாம்.)
சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - குடும்பத்துடன் பார்க்கத் தகுந்த ஆனால் மிக மெதுவாக நகரும் திரில்லர் டிராமா.