The Marked Woman விமர்சனம்: நெட்பிளிக்ஸில் மிரட்டும் ஸ்பானிஷ் க்ரைம் த்ரில்லர்!

The Marked Woman
The Marked Woman
Updated on
ரேட்டிங்(3 / 5)

29/05/2026 முதல் திரை அரங்குகளில் வெளியான தி மார்க்ட் வுமன் (The Marked Woman)  05/06/2026 முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.

ரோசா மாண்ட்டரோ, ஆலிவர் ட்ரக் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய LA Desconocida என்ற ஸ்பானிஷ் நாவலைத் தழுவி திரைக்கதை அமைக்கப்பட்ட இந்தப் படத்துக்கு டைட்டிலும் நாவலின் டைட்டிலே வைக்கப்பட்டது.

ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகியின் அக்கா ஒரு கடத்தல் கும்பலில் வேலை செய்து, அந்த கும்பலைப் பற்றிப் போலீசுக்குத் தகவல் தரும் இன்பார்மராக இருக்கிறாள். கோடிக்கணக்கான ரூபாய் பணம் உள்ள ஒரு இடத்தின் பார்கோடு அவளுக்குக் கிடைக்க அவள் அதை நாயகிக்குப் பாஸ் செய்து விடுகிறாள். அதற்குப்பின் அவள் ஆள் அட்ரசே இல்லை. உயிருடன் இருக்கிறாளா? கொல்லப்பட்டாரா? என்பது தெரியவில்லை.

நாயகி ஒரு ஐடி டிபார்ட்மெண்ட் ஊழியர். சிஸ்டம் ஹேக்கிங் அறிந்தவர். படத்தோட ஓப்பனிங்க் சீனில் மயக்க நிலையில் ஒரு  கண்ட்டெய்னரில் கண்டெடுக்கப் படுகிறார். தலையில் அடிபட்டதால் அவருக்குப் பழைய நினைவுகள் எதுவும் இல்லை.

நாயகியைத் தேடி ஒரு கும்பல் வருகிறது. பணம் இருக்கும் இடத்துக்கான பார்கோடு நாயகியிடம் இருப்பதால் அதைக் கைப்பற்ற அந்த கும்பல் துடிக்கிறது. ஆனால் நாயகிக்குத்தான் யார் என்பதும் நினைவில்லை. தன் அக்கா பற்றியும் ஞாபகம் இல்லை.

ஒரு லேடி போலீஸ் ஆபீசர் நாயகியைப் பாதுகாக்க நியமிக்கப்படுகிறார். அந்த லேடி போலீஸ் ஆபீசருக்குத் துணையாக இன்னொரு ஆண் போலீஸ் ஆபிசர் நியமிக்கப்படுகிறார். இவரிடம் தான் நாயகியின் அக்கா போலீஸ் இன்பார்மர் ஆக வேலை பார்த்தார்.

இந்த விஷயம் நாயகிக்கோ, நாயகியைக் காப்பாற்ற வந்த லேடி போலீஸ் ஆபீசருக்கோ தெரியாது. நாயகியைத் தேடி வரும் கும்பலுக்கும் இந்த செக்யூரிட்டி ஆபீசர்ஸ் பற்றித் தெரியாது.

நாயகியை அந்த கும்பல் பிடித்தார்களா? நாயகியின் அக்கா நிலை என்ன? லேடி போலீஸ் ஆபீசர் வெற்றி பெற்றாரா? என்பது மீதித் திரைக்கதை.

நாயகியாக அனா ரூஜஸ் பிரமாதப்படுத்தி இருக்கிறார். வெற்றி விழா கமல் மாதிரி எல்லாம் மறந்த கேரக்டராக வரும்போது பரிதாபத்தை ஏற்படுத்துபவர் ஆக்சன் சீக்வன்சில் அதகளப்படுத்துகிறார். ஹாஸ்பிடல் சண்டை சீன் கலக்கல் ரகம்.

நாயகியைக் காப்பாற்றும் லேடி போலீஸ் ஆபீசராக கேண்டேலா பெனா வித்தியாசமான கேரக்டர் டிசைனில் கவர்கிறார். சோம்பேறித்தனமான முக பாவனை, நியாயத்துக்குக் குரல் கொடுப்பது, உயர் அதிகாரிகளை எதிர்த்துப் பேசுவது, சக கொலீக்சை லெப்ட் ஹேண்டில் டீல் செய்வது அனைத்தும் அருமை.

லேடி போலீஸ் ஆபீசருக்கு உதவுபவராகவும், நாயகியின் அக்காவிடம் இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணுபவருமாக வரும் போலீஸ் ஆபீசராக போல் லோபஸ் நடித்திருக்கிறார். இவர் வில்லனா? நாயகனா? என்ற சஸ்பென்சைக் காப்பாற்றியது கச்சிதம்.

நாயகியின் அக்காவாக கிரா மிரோ அதிக வாய்ப்பில்லை என்றாலும் கதையின் முடிச்சை அவிழ்ப்பவராக வருகிறார்.

படத்தில் வரும் மற்ற சின்ன சின்னக்கேரக்டர்களும் கச்சிதமாக நடித்துள்ளனர்.

இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் கன கச்சிதம்.

லாரா சேண்டிம் எழுதிய திரைக்கதைக்கு உயிர் கொடுத்து இயக்கி இருப்பவர் கேப் இபனேஸ்.

இதையும் படியுங்கள்:
உதவி இயக்குநர்களின் வலியைப் பேசும் 'மாலிவுட் டைம்ஸ்' விமர்சனம்!
The Marked Woman

சபாஷ் டைரக்டர்

  • ஓப்பனிங்க் சீனிலேயே நாயகி, நாயகியின் அக்கா சேசிங் சீனைக்காட்டி பரபரப்பைக் கிளப்பிய விதம் அருமை.

  • நாயகி ஹாஸ்பிடலில் இருக்கும்போது வில்லனின் ஆள் நாயகியைக் கொல்ல வரும் சீனில் ஆக்சன் சீக்வன்ஸ் அதகளம். விக்ரம் படத்தில் கமல் பல கட்டிடங்களில் தாவி ஓடி குதிப்பது போல நாயகியின் சாகசம் கலக்கல் ரகம்.

  • லேடி போலீஸ் ஆபீசரின் உதவியாளர். நல்லவரா?கெட்டவரா? என்பதை யூகிக்க முடியாத வண்ணம் காட்சிகளை அடுக்கிய விதம் அருமை

லாஜிக் மிஸ்டேக்ஸ், திரைக்கதையில் சில  நெருடல்கள் 

  • முதல் 30 நிமிடங்கள் ரொம்பவே மெதுவான திரைக்கதை. பொறுமை தேவை.

  • லேடி போலீஸ் ஆபீசருக்கும், உயர் அதிகாரிக்கும் நடக்கும் கருத்து மோதல்கள் பல படங்களில் பார்த்து சலித்தவை.

  • நாயகி ஒரு ஐடி டிபார்ட்மெண்ட் சிஸ்டம் ஹேக்கர் மட்டுமே. அவர் போலீஸ் போல ஆக்சனில் கலக்குவது எப்படி? போலீஸ் கட்டிப்போட்டபோது லாவகமாகத் தப்பிப்பது எப்படி?

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+

சிபிஎஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் பாதி ஸ்லோ பின் பாதி ஆக்சன் அதகளம், பொறுமை உள்ள கிரைம் திரில்லர் ரசிகர்கள் பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com