Baakiyalakshmi serial  update
Baakiyalakshmi serial

பாக்கியலட்சுமி வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி… கோபி பேசியதைக் கேட்டு ஆடிப்போன குடும்பம்!

Published on

பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி இறப்புக்கு பிறகு பாக்கியாவின் ரெஸ்டாரன்டில் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் கோபி பேசியது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தியின் இறப்பு குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமமூர்த்தியின் கடிதங்களைப் படித்த ஒவ்வொருவரும் சோக வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். குடும்பம் சோகத்தில் இருந்தாலும், மூன்று நாட்களுக்கு பின்னர் பாக்கியா ரெஸ்டாரன்டைத் திறக்கிறார். அங்கும் ராமமூர்த்தி நினைவிலேயே இருக்கிறார். அந்தநேரம் பார்த்து பழனிச்சாமி அங்கு வருகிறார். அவரிடம் தனது மாமனார் பற்றி பேசி மிகவும் வருத்தப்படுகிறார்.

அவர் இல்லாதது பெரிய பலம் குறைந்தது போல் உணர்வதாக கூறினார். இனி என்ன பண்ன போகிறேன் என்றே தெரியவில்லை என்று வருத்தப்படுகிறார். மேலும், ரெஸ்டாரன்டில் அவரது போட்டோ வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்போவதாகவும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைக்கப்போவதாகவும் கூறினார். பழனிச்சாமி அவரது யோசனையை வரவேற்கிறார். இதனையடுத்து பாக்கியா அதற்கான வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறார்.

மற்றொருப்பக்கம், வீட்டில் ஈஸ்வரி, ராமமூர்த்தியின் கடைசி பிறந்தநாள் நிகழ்ச்சி வீடியோவைப் பார்த்து வருத்தப்படுகிறார். அதனை செழியன் பார்த்து பாட்டி நிலையை கண்டு வருத்தம் கொள்கிறார். இதனிடையே ஆபிஸ் பிரச்சனையாலும் மைண்ட் அப்செட்டில் இருக்கிறார்.

அப்போது செழியன் வாசலில் நின்றுக்கொண்டிருக்கும்போது கோபி அவர் அப்சட்டில் இருப்பதைப் பார்த்து டீ குடிக்க அழைக்கிறார். இருவரும் டீ குடித்துக் கொண்டே பேசுகின்றனர். செழியன் ஆஃபிஸ் விஷயத்தைப் பற்றி பேசுகிறான். கோபி அதற்கு அட்வைஸ் அளிக்கிறார். அப்படியே பேச்சு பாக்கியாவிடம் செல்ல, கோபி பாக்கியாவை திட்டுகிறார், உடனே செழியன் கடுப்பாகி அவரைத் திட்டுகிறார். இந்த பேச்சுவார்த்தையில், அந்த நிகழ்ச்சி குறித்து செழியன் கோபியிடம் சொல்லிவிடுகிறார்.

இதனையடுத்து நிகழ்ச்சி தொடங்குகிறது. ஈஸ்வரி தாத்தா போட்டோவை திறக்கும் போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக அங்கு கோபி வருகிறார். அவரை யாரும் கண்டு கொள்ளாமல் போட்டோவை திறந்து வைத்து அனைவரும் பேச ஆரம்பிக்கின்றனர். பாக்யா, செல்வி, எழில், அமிர்தா என அனைவரும் ராமமூர்த்தி பற்றி பெருமையாக உணர்ச்சிவசமாக பேசி கொண்டிருக்கின்றனர்.     

இதையும் படியுங்கள்:
செக்டர் 36 - நொய்டா தொடர்கொலைகளும் அடித்தட்டு மனிதர்களின் உயிரின் விலையும்!
Baakiyalakshmi serial  update

அப்போது கோபியும் நானும் பேசுவேன் என்று கூறி மைக்கைப் பிடிங்கி பேசுகிறார், அதாவது இங்க இருக்கிறவரு என்னோட அப்பா. ஆனால் கொஞ்ச நாளா என்னை அப்பான்னு சொல்லக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. சின்ன வயசுல இருந்து என்னை அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும்னு அவரோட இஷ்டத்துக்கு தான் என்னை ஆட்டி வைச்சாரு. எல்லாரும் அவரை பத்தி பெருமையா பேசுனீங்க. எனக்கும் அவரை பத்தி சொல்ல வேண்டியதை சொல்லணும்ல என்று பேசிவிடுகிறார்.

இதனைக்கேட்டு பாக்கியலட்சுமி குடும்பமே ஆடிப்போய் நிற்கிறது.

logo
Kalki Online
kalkionline.com