பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கதிர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கதிர் நிரபராதி என்று பாண்டியன் குடும்பம் நிரூபிக்க போராடுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 1 தொடர் அண்ணன் தம்பிகள் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சீரியல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் ஆரம்பமானது. இது அப்பா மகன்களின் கதையாக இருந்து வருகிறது.
கதிர் ஒரு பெண்ணை கடத்திவிட்டார் என்று சொல்லி போலிஸார் அவரைக் கைது செய்கிறார்கள். இதனைப் பார்த்துக்கொண்டிருந்த கோமதி அண்ணன்கள் “இவர்கள் புதிதாக கடத்தல் தொழில் செய்கிறார்கள்” என்று வாயை விட, பாண்டியன் கோபத்தில் அடிக்கப்போகிறார். உடனே மீனா, தடுத்து விட்டார். பின் கோமதி தன்னுடைய அண்ணன்கள் இடம் ரொம்ப எமோஷனலாக தன்னுடைய மகனைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஆனால், அவர்கள் எதுக்குமே மனம் இறங்கவில்லை. கடைசியில் பாண்டியன், என் மகன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து வெளியே கூட்டி வருவேன் என்று சவால் விட்டார்.
போலீஸ் ஸ்டேஷனில் கதிரை போலீஸ் அடி அடி என்று அடிக்கின்றனர். கதிர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. பயங்கரமாக துன்புறுத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் கதிரின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பிக் கொண்டிருக்க, மீனா- தங்கமயில் ஆறுதல் சொல்லி இருந்தார்கள். ராஜி, தன்னுடைய கணவர் எந்த தவறும் செய்யவில்லை என்று சொல்கிறார்.
வக்கீல் பாண்டியனை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார். கதிரை பார்த்தவுடன் பாண்டியன் மிகவும் எமோஷ்னலாகிறார். அப்போது ராஜியின் சித்தப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அப்போது அவர், பாண்டியன் குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக பேச, சரவணன் சண்டைக்குப் போனார். இதனால் போலீஸ், பாண்டியன் குடும்பத்தை வெளியே அனுப்பி விட்டது.
இதற்கிடையே கதிர் நான் கடத்தியதாக கூறிய அந்த பெண்ணைத் தேடி கண்டுபிடித்தால்தான் உண்மை வெளிய வரும் என்று செந்திலிடம் ஐடியா கூறுகிறார்.
இந்தநிலையில் இன்றைய ப்ரோமோவில் ராஜி போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார். அப்போது போலீஸ், இவன நம்பியா போனாய், இவன் ரொம்ப மோசமானவன் என்று கூறுகிறார். அவன் எந்த பெண்ணையும் கடத்தவில்லை என்று கதிருக்கு சப்போர்ட் செய்து பேசுகிறார் ராஜி. அந்தசமயம் பார்த்து செந்தில்- சரவணன் இருவருமே கதிர் கடத்தியதாக சொன்ன பெண்ணை அழைத்து வருகிறார்கள்.
அந்த பெண் உண்மையை கூற, கதிரை போலீஸ் விட்டுவிடுகிறது. மேலும் பாண்டியன் போலீஸை திட்டுகிறார்.