தமிழக மக்களுக்கு சினிமா மீது எந்தளவுக்கு மோகம் உள்ளதோ தற்போது அதே அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் மீதும் மோகம் அதிகரித்துள்ளது. வீட்டில் உள்ள பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் பொழுதுபோக்கே சீரியல் பார்ப்பது தான். முன்பெல்லாம் சில சீரியல்கள் ஒளிபரப்பான நிலையில் தற்போது காலை முதல் இரவு வரை தொடர்ந்து புதுப்புது சீரியல்கள் வந்த வண்ணம் உள்ளன.
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற முன்னணி சேனல்களில் பல சீரியல்கள் ஒளிபரப்பினாலும் டிஆர்பி யில் ஆதிக்கம் செலுத்தும் சேனலாக பெரும்பாலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தான் முன்னிலை வகிக்கின்றன. டிஆர்பி இறங்கும் போது சேனல்கள் தங்கள் சீரியலில் பல்வேறு மாற்றங்களை செய்கின்றன. அதிகமாக தொலைக்காட்சியில் பார்க்கப்பட்ட சீரியல்களின் பட்டியல் டிஆர்பி அடிப்படையில் வெளியாகி இருக்கிறது. எந்த சீரியல்கள் முதல் 5 இடத்தை பிடித்துள்ளன என்று பார்க்கலாம்.
ஒவ்வொரு வாரமும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் மூலம் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்கள் எது என்று கணித்துவிடலாம். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் பல வாரங்களாக டிஆர்பி யில் 2-வது இடத்தில் இருந்தது. இந்த வாரம் இந்த சீரியல் 10.45 புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கு வந்துள்ளது.
இதை தொடர்ந்து சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த முறை 10.41 புள்ளிகளை பெற்று 2 வது இடத்தை பிடித்திருக்கிறது.
அதனை தொடர்ந்து சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரம் 10.23 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை பிடித்திருக்கிறது.
சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 9.16 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.
விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 8.05 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.