Sun tv serial
Sun tv serial

சன் டிவியின் இந்த சீரியல்கள் நேரம் விரைவில் மாற்றம்..!

Published on

சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர்.

பெரும்பாலும் மக்கள் அதிகம் சன் டிவி சீரியல்களும், விஜய் டிவி சீரியல்களை தான் பார்ப்பார்கள். காலை முதல் இரவு வரை சன் டிவியில் சீரியல் ஒளிப்பரப்பப்படுகின்றன. அப்படி வரும் சீரியல்களின் நேரம் மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை பொழுதை விட மாலையில் சீரியல்களுக்கு பார்வையாளர்கள் அதிகம். அதனால் தான் முக்கியமான சீரியல்களை ப்ரைம் டைமில் ஒளிப்பரப்புகிறார்கள்.

சன் டிவியின் சீரியல்கள் தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகின்றன. சமீப காலமாகவே டாப் 5 லிஸ்டில் அனைத்து இடங்களையும் சன் டிவி தான் பிடித்து இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய சிங்கப்பெண்ணே சீரியல் தற்போது டிஆர்பியில் முதல் இடத்தில் இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
"சேட்டா" அண்ணனை இழந்த தங்கை உருக்கம்... வைரலாகும் போஸ்ட்!
Sun tv serial

இந்நிலையில் விரைவில் மீனா என்ற ஒரு புது சீரியலை சன் டிவி தொடங்க இருக்கிறது. அந்த சீரியல் காலை 11 மணி ஸ்லாட்டில் தான் ஒளிபரப்பாக இருக்கிறது.

அதனால் மற்ற சில சீரியல்களின் நேரமும் மாற்றம் அடைய இருக்கின்றன. அதாவது அருவி சீரியல் மதியம் 12 மணிக்கும், லட்சுமி தொடர் மதியம் 2.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்

logo
Kalki Online
kalkionline.com